உலகம் செய்தி

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தி ஐ.நாவில் உரையாற்றவுள்ள நெதன்யாகு

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் இந்த வாரம் உரையாற்றவுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்திப் பேசவுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் இந்த வாரம் உரையாற்றவுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்திப் பேசவுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

அதேவேளை, தம்மை விமர்சித்த நியூயோர்க் நகர மேயர் சோஹ்ரன் மம்தானி (Zohran Mamdani) ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவளிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னதாக, “நெதன்யாகு ஒரு போர்க் குற்றவாளி மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான கொடூரமான இனப்படுகொலையின் முக்கிய சூத்திரதாரி” என நியூயோர்க் மேயர் சோஹ்ரன் மம்தானி சி.என்.என் (CNN) செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் சாடியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நெதன்யாகுவின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் வியாழக்கிழமை ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றவுள்ள நெதன்யாகு, வெளியிட்டுள்ள குறுகிய வீடியோ பதிவொன்றில்:

“நான் ஐ.நா. சபைக்கு வருகை தருகின்றேன். எங்களது வீரமிக்க படைவீரர்களைப் பற்றிய உண்மையையும், உங்களைப் பற்றிய (மேயர் மம்தானி) உண்மையையும் உலகிற்கு எடுத்துரைக்கப் போகின்றேன்.

எங்களது மக்களைப் படுகொலை செய்த ஹமாஸ் பயங்கரவாத அரக்கர்களுக்கு ஆதரவளிக்கும் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நியூயோர்க் யூதர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடுவதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்” என்று காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.

நெதன்யாகு நியூயோர்க்கிற்கு வருகை தந்தால் அவரைக் கைது செய்யப்போவதாக மேயர் மம்தானி முன்னதாகத் தெரிவித்திருந்தபோதிலும், தனக்கு அதற்கான அதிகார வரம்பு இல்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.

மம்தானியின் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு மற்றும் காசா மீதான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களுக்கு எதிரான விமர்சனங்களைச் சுட்டிக்காட்டி, அவர் யூத எதிர்ப்பு மனப்போக்கு கொண்டவர் எனச் சில குடியரசுக் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனினும், யூத எதிர்ப்பைக் கண்டித்துள்ள மம்தானி, இஸ்ரேல் மீதான தனது விமர்சனங்கள் தவறாக யூத எதிர்ப்பாகச் சித்தரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் கடத்திச் செல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதற்குப் பதிலடியாக ஹமாஸின் இராணுவ மற்றும் ஆட்சி அதிகாரத்தை அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களைத் தொடங்கியது. இத்தாக்குதல்களில் இதுவரை 73,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகத் தாம் இனப்படுகொலை செய்யவில்லை என மறுத்துள்ள இஸ்ரேல், பொதுமக்கள் வாழும் பகுதிகளை ஹமாஸ் அமைப்பினர் கேடயமாகப் பயன்படுத்தி வருவதாகவும், தாங்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே போரிடுவதாகவும் கூறி வருகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி