உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து!
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜிஎஸ்பி பிளஸ் (GSP+) வரிச் சலுகையைத் தொடர்வதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை சரியான நேரத்தில் முழுமையாக நிறைவேற்றுவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம்–இலங்கை கூட்டு ஆணையம் 27வது அமர்வு கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றபோது இந்த வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது. ஜிஎஸ்பி பிளஸ் திட்டத்தின் கீழ் உள்ள 27 முக்கிய சர்வதேச உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதில் தமது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அவற்றின் முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு காலமுறைப்படி […]













