பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வேலை செய்வோருக்கு குறி – கைது நடவடிக்கைகள் அதிகரிப்பு
பிரித்தானியாவில் சட்டவிரோத வேலைக்கு எதிரான கைது நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய உணவு வினியோகம் டெலிவரி துறைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 325 சதவீதமான கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி முந்தைய இரண்டு ஆண்டு காலத்தில் விரோதமாக வேலை செய்த 458 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரம் கடந்து 2024 தொடக்கம் 2026 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 1946 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே காலகட்டத்தில் சட்டவிரோதமாக ஆட்களை பணியமர்த்தியதாக சந்தேகிக்கப்படும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக குடிவரவு அதிகாரிகள் 1000க்கும் மேற்பட்ட அமலாக்க பரிசோதனைகளையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




