ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல்: மீண்டும் போர் பதற்றம்!
ஈரானின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ இலக்குகளின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானில் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் அல்லது இலக்குகளின் துல்லியமான இடங்கள் குறித்த மேலதிகத் தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த மோதலைத் தொடர்ந்து, தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையம் தனது அனைத்து விமானச் சேவைகளையும் காலவரையறையின்றி நிறுத்தி வைத்துள்ளது.
ஏற்கனவே இப்பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வான்வழித் தாக்குதல் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.





