போர் நிறுத்த ஒப்பந்தமீறலுக்கு அமெரிக்காவே பொறுப்பு: ஈரான் சீற்றம்!
போர்நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு அமெரிக்காவே முழுப் பொறுப்பு என்று ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Esmaeil Baghaei குற்றம் சாட்டியுள்ளார்.
பிராந்தியத்தில் இஸ்ரேல் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அமெரிக்கக் கொள்கைகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.
வாஷிங்டனின் நேரடி ஆதரவு இன்றி இஸ்ரேலால் இத்தகைய அத்துமீறல்களைச் செய்ய இயலாது எனவும் Esmaeil Baghaei சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவின் தலையீடே முதன்மைக் காரணம் என ஈரான் கருதுகின்றது.





