இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு,  121 கிலோ தங்கம் காணிக்கை

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு,  121 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்க தொழில் அதிபர் ஒருவர் முன்வந்துள்ளார்.

இதன் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 150 கோடி முதல் 160 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி கோவில் நிர்வாக வரலாற்றில், தனிநபர் ஒருவரால் சுவாமிக்கு வழங்கப்படும் மிகப்பெரிய தங்கக் காணிக்கை இதுவாகும்.

இதற்கமைய  43 வகையான தங்க ஆபரணங்களில், ஏழுமலையானுக்கான கிரீடம், திருவடிப் பாதங்கள், பல அடுக்குகளைக் கொண்ட தங்க மாலைகள் இடம்பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த தங்க ஆபரணங்கள் வரும் 26ஆம் திகதி கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே