கிம்மை சந்திக்க கடும் பிரயத்தனம் – தோல்வியில் முடிந்த ட்ரம்பின் முயற்சி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமீபத்திய ஆசியப் பயணத்தின் போது வட கொரியத் ஜனாதிபதி கிம் ஜாங் உன்னைச் சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்ததாகவும் ஆனால் அது கைக்கூடவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பியோங்யாங் முன்வைத்த சில நிபந்தனைகளை அமெரிக்காவால் நிறைவேற்ற முடியாமல் போனதே இந்த சந்திப்பு இடம் பெறாமைக்கு காரணம் எனவால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியா விதித்த நிபந்தனைகளின் விவரங்கள் வெளியாகவில்லை.
மேலும் சீனா செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் கிம்மை சந்திக்க கூடும் என்று தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை கடந்து 2019 ஆம் ஆண்டு கிம்மை சந்திப்பதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ளுமாறு ட்ரம்ப் தனது உதவியாளர்களை வன்மையாக வலியுறுத்தியிருந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




