Consent Preferences
உலகம்

எண்ணெய் உற்பத்தி இலக்குகளை நிர்ணயிப்பதில் சிக்கில் – OPEC+ கலந்துரையாடலில் நடந்தது என்ன?

2027-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான எண்ணெய் உற்பத்தி இலக்குகளை மாற்றாமல் வைத்திருக்க ஒபெக்+ அமைப்பு தீர்மானித்துள்ளது.

OPEC+ உறுப்பு நாடுகள் இன்று காணொளி மூலம்  பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தில் 2027-ஆம் ஆண்டிற்கான புதிய உற்பத்தி இலக்குகளை நிர்ணயிக்கத் திட்டமிட்டிருந்ததுடன், உறுப்பு நாடுகளின் உற்பத்தித் திறன் குறித்த தனது முதல் ஆய்வையும் மேற்கொண்டது.

ஆனால், இந்தத் திறன் மதிப்பீடுகள் மிகவும் குறைவாக இருப்பதாக ஈராக்கும் கஜகஸ்தானும் குறிப்பிட்டன.

இதன்காரணமாக உற்பத்தி இலக்குகளை நிர்ணயிக்கும் முடிவு கடினமாகியதாக ஒபெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்பிறகு,   2027-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உற்பத்தி இலக்குகளை மாற்றாமல் வைத்திருக்க தீர்மானித்ததுடன், இது தொடர்பில் கொள்கை ரீதியான உடன்பாட்டும் எனட்டப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்