சம்பியன் பட்டம் எந்த அணிக்கு? இலங்கை, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஆசியக் கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் (Asia Cup Rising Stars) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணி இன்று (29) பாகிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்கிறது.
கட்டாரின் தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
இந்தத் தொடரில் இரு அணிகளும் தோல்வியின்றி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.
அரையிறுதிப் போட்டியில் இந்திய ஏ அணியை எட்டு விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. 318 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி 41.3 ஓவர்களில் எட்டியது.
அந்தப் போட்டியில் லசித் குரூஸ்புள்ளே 116 ஓட்டங்களையும், சினெத் ஜயவர்தன 105 ஓட்டங்களையும் பெற்றனர்.
மறுபுறம், பங்களாதேஷ் ஏ அணியை ஐந்து விக்கெட்டுகளால் வீழ்த்தி பாகிஸ்தான் ஏ அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இதுவரை நடைபெற்ற ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் பாகிஸ்தான் மூன்று தடவைகளும், இலங்கை இரண்டு தடவைகளும் சம்பியன் பட்டம் வென்றுள்ளன.
இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் இலங்கை தனது மூன்றாவது சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் வாய்ப்பைப் பெறும்.




