Consent Preferences
ஐரோப்பா செய்தி

புலம்பெயர்ந்தோரால் திணரும் கிரீஸ் – 48 மணிநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் வருகை

கிரீஸ் தீவுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் இருந்து 1000 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளனர்.

இன்றைய  தினம் 190 பேர் மீட்கப்பட்டதாக கிரேக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 48 மணிநேரத்தில் அதிகளவிலான புலம்பெயர்ந்தோர் வருகை தந்ததை தொடர்ந்து மிகக் கடினமான நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை முகமையான ஃபிரான்டெக்ஸ் (Frontex) இயக்கிய ட்ரோன்களால் குறித்த புலம்பெயர்ந்தோரின் படகு இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் அருகிலுள்ள கலோய் லிமெனெஸ் Kaloi Limenes  மற்றும் இயராபெட்ரா Ierapetra  துறைமுகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கிரேக்க கடலோரக் காவல்படை கூறியது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள குடியேற்றத்துறை அமைச்சர் தானோஸ் பிளெவ்ரிஸ் Thanos Plevris, சமீபத்திய புலம்பெயர்வை தொடர்ந்து புலம்பெயர்ந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,500 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி