Consent Preferences
ஐரோப்பா

ஏதென்ஸில் மாணவர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல்

  • November 4, 2026
  • 0 Comments

ஏதென்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் தலைக்கவசம் அணிந்திருந்த மர்மக் கும்பல் ஒன்று  மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாக கிரேக்க அவசர மருத்துவ சேவை மற்றும் ஏதென்ஸ் செய்தி முகமை (Athens News Agency) தெரிவித்துள்ளன. காயமடைந்த மூவருக்கும் ஏதென்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அதேநேரம் தாக்குதலை நடத்தியவர்கள் யார் அல்லது எதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது உடனடியாகத் தெரியவரவில்லை என்றும் விசாரணைகள் […]

உலகம் செய்தி

காசாவில் தொடர் தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேல் – நால்வர் உயிரிழப்பு

  • October 22, 2026
  • 0 Comments

காசாவில் இன்று இடம்பெற்ற தனித்தனி தாக்குதல் சம்பவங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காசா நகரில், ஒரு கார் மீதான தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். அதேபோல் தெற்கு நகரமான கான் யூனிஸில் நடந்த மற்றொரு தாக்குதலில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலஸ்தீனியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், வடக்கில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமுக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் […]

உலகம்

அடுத்த சுற்று தாக்குதலில் கடலடி கேபிள்கள் இலக்காகலாம் -ஈரான் எச்சரிக்கை

  • October 20, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருவதால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கடலடி இணைய கேபிள்கள் தாக்குதலுக்கு இலக்காகலாம் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி, ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில் மற்றொரு இராணுவ மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறை ஈரான் நிராகரிக்கவில்லை என்றும், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், முன்பை விட வலுவாகப் பதிலடி கொடுக்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

உலகம்

காசாவில் தாக்குதல்களை தொடரும் இஸ்ரேல் – ஒருவர் பலி

  • October 12, 2026
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆயுதம் ஏந்திய ஒரு தீவிரவாதியை இலக்காகக் கொண்டே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டதாக  இஸ்ரேல் கூறுகிறது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹமாஸ் மீண்டும் ஆயுதம் ஏந்தி தாக்குதல்களைத் தொடங்கத் தயாராகி வருவதாக இஸ்ரேல் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்ற நிலையில், காசா பகுதியில் மோதல்கள் […]