உலகம்

அமெரிக்காவில் முவ்வாயிரத்திற்கும் மேற்பட் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவு

இந்த மாதத்தில் காட்டுத்தீ ஏற்படுவதற்கு சாதாகமான வானிலை காணப்படுவதாகவும், இதனால் அமெரிக்காவிற்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் காடுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஜுன் 30 ஆம் திகதிவரை அண்ணளவாக 157 சதவீதமான நிலப்பரப்பு காட்டுத்தீயினால் சாம்பலாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுவரை 36,262 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 13 மாநிலங்களில் குறைந்தது 49 பெரிய தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையே கொலராடோ, யூட்டா, நியூ மெக்சிகோ, நெவாடா மற்றும் ஒரேகான் ஆகிய மாநிலங்கள்  வறண்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சில பகுதிகளில் வெப்பநிலையானது 115°F ஆகவும், சில பகுதிகளில்   105°F  ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலை தீபற்றுவதற்கு ஏதுவான சூழலை வழங்குவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான வறட்சியான காலப்பகுதியை அதிகூடிய வெப்பநிலை இன்னும் ஆபத்தானதாக மாற்றுவதாவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே இந்த மோசமான வானிலையை  சமாளிக்க பட்டாசுகளை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்