உலகம்

இனத் துவேஷம் – ஐ.நா தலைமையத்திற்கு அருகே நபர் ஒருவர் தீக்குளித்து உயிர்மாய்ப்பு

  • July 3, 2026
  • 0 Comments

நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு அருகே நேற்று நபர் ஒருவர் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார். குறித்த நபர் தீக்காயங்களுடன் பெல்லிவியூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திபெத்திய ஊடகங்கள் அந்த நபரை லோக்பா ரங்சென் என அடையாளப்படுத்தியுள்ளன. அவர் ஒரு திபெத்திய ஆர்வலர் மற்றும் ஊபர் ஓட்டுநர் என்றும், திபெத்தியக் கொடியுடன் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் புதிய இன ஒற்றுமைச் சட்டத்தின் பின்னணியில், திபெத்தியர்கள் மீதான […]

லண்டனிலிருந்து வெளிவந்த ஒரு ஊடக அறிக்கையின்படி, 1950கள் முதல் 1970கள் வரை, திருமணமாகாமல் குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பிற்காகக் கொடுக்குமாறு வற்புறுத்தப்பட்டனர். ஐரோப்பா செய்தி

முறைப்படி மன்னிப்பு கோரி பிரித்தானிய பிரதமர்

  • July 3, 2026
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குழந்தைகளைக் கட்டாயத் தத்தெடுப்புக்கு உட்படுத்தியதில் அரசின் பங்கு குறித்து, பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் முறைப்படி மன்னிப்புக் கோரியுள்ளார். லண்டனிலிருந்து வெளிவந்த ஒரு ஊடக அறிக்கையின்படி, 1950கள் முதல் 1970கள் வரை, திருமணமாகாமல் குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பிற்காகக் கொடுக்குமாறு வற்புறுத்தப்பட்டனர். 185,000 தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பிற்காகக் கொடுக்க வற்புறுத்தப்பட்டதாக ஊடக அறிக்கைகள் மதிப்பிட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு நேர்ந்தது நமது வரலாற்றில் ஒரு கறை […]

33 வயதான கார்லி க்ளோஸ், தான் குடியரசுக் கட்சியை ஆதரிக்கவில்லை என்றும், ஆனால் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிப்பவர் என்றும் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

அமெரிக்க சூப்பர்மாடல் கார்லி க்ளோஸூக்கும் டிரம்புக்கும் இடையில் என்ன உறவு?

  • July 3, 2026
  • 0 Comments

அமெரிக்க சூப்பர்மாடல் கார்லி க்ளோஸ், குடும்ப உறவினராக இருந்தபோதிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை ஒருபோதும் சந்தித்ததில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். ப்ளூம்பெர்க் ஒரிஜினல்ஸ்க்கு அளித்த செவ்வி ஒன்றில், தான் ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்ததே இல்லை என்று தெரிவித்துள்ளார். தன் கணவரின் குடும்பத்தின் அரசியல் சார்பு குறித்துக் கேட்டபோது, ​​”நான் யார், என் வாழ்க்கை எந்த விழுமியங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது, எனக்கு முக்கியமான பிரச்சினைகள் எவை என்பது எனக்குத் தெரியும். நான் என் அடையாளத்தை ஒருபோதும் இழந்ததில்லை, ஆனால் […]

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த மாதம் 20ம் திகதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தார். செய்தி

அனிதா ராதாகிருஷ்ணன் கைது:கொந்தளிக்கும் திமுக உறுப்பினர்கள்

  • July 3, 2026
  • 0 Comments

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூராக பேசியமைக்காக திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த மாதம் 20ம் திகதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தார். இது குறித்து தவெக நிர்வாகிகள் ஆத்தூர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் முன் பிணை கோரி […]

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடங்கிய முதல் நாளான பெப்ரவரி 28 ஆம் திகதி, கூட்டு வான்வழித் தாக்குதலில் 86 வயதான அலி கமேனி கொல்லப்பட்டார். உலகம் செய்தி

கமேனியின் இறுதிச்சடங்கு – பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

  • July 3, 2026
  • 0 Comments

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்குகள்ஆரம்பமாகியுள்ள நிலையில் இதில் பங்கேற்க 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என ஈரானின் அரசு ஊடகமான IRIB தெரிவித்துள்ளது. அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடங்கிய முதல் நாளான பெப்ரவரி 28 ஆம் திகதி, கூட்டு வான்வழித் தாக்குதலில் 86 வயதான அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது அடக்க சடங்குகள் தொடக்கத்தில் மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், போர் நீடித்ததன் […]

உலகம்

தாய்லாந்தில் துயரம் -துறவிகளுக்கு எமனாக வந்த 11 வயது சிறுவன்

  • July 3, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் பௌத்தத் துறவிகள் கலந்துகொண்டிருந்த ஊர்வலத்தில் 11 வயதுடைய சிறுவன் செலுத்திய கெப் வாகனம் ஒன்று புகுந்து மோதியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தாய்லாந்தின் முக்டாஹான் மாநிலத்தில்  நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில், 35 பௌத்தத் துறவிகளும் ஐந்து பக்தர்களும் இணைந்து ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கெப்ரக வாகனம் கூட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது மோதியது. இதில் ஐந்து துறவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் 10 பேர் படுகாயம் […]

ஜுலை மாதத்தில் கடந்துள்ள 2 நாட்களில் மாத்திரம் 2,278 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு தீவிரம்

  • July 3, 2026
  • 0 Comments

இலங்கையில் ஜனவரி முதல் ஜுலை 02 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் 57 ஆயிரத்து 668 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளிகள் பதிவாகிவருகின்றனர். ஜுலை மாதத்தில் கடந்துள்ள 2 நாட்களில் மாத்திரம் 2,278 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயினால் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். நாட்டில் 14 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் இருந்தாலும் மேல் மாகாணத்திலேயே நிலைமை மோசமாக உள்ளது. மேல் மாகாணத்தில் மாத்திரம் 30 ஆயிரத்து 253 […]

ஐரோப்பா

உக்ரைனில் துக்க தினம் அனுஷரிப்பு

  • July 3, 2026
  • 0 Comments

ரஷ்யா நேற்று முன்தினம் நடத்திய பாரிய தாக்குதலில் உக்ரைனில் 30 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து துக்க தினத்தை அனுஷரிக்கும் முகமாக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் போராடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. இதற்கிடையே  வடக்கு சுமி பகுதியில் இன்று  ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில்  பெண் ஒருவர் மற்றும் அவரது கைக் […]

ஆஸ்திரேலிய சர்வதேச நீதி மையத்தால் (Australian International Justice Centre) இந்த ஆதார ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

காசாவில் கட்டிடம் தகர்ப்பு: ஆஸ்திரேலியர் மீது போர்க் குற்றச்சாட்டு

  • July 3, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையில் (IDF) பணியாற்றிய ஆஸ்திரேலிய பிரஜை ஒருவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆதார ஆவணங்களை ஆஸ்திரேலிய Federal காவல்துறை (AFP) பரிசீலித்து வருகிறது. ஆஸ்திரேலிய சர்வதேச நீதி மையத்தால் (Australian International Justice Centre) இந்த ஆதார ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஆஸ்திரேலிய பிரஜை மூன்று குற்றங்களைச் செய்துள்ளதாகவும், அவை ஆஸ்திரேலிய சட்டத்தை மீறுவதாகவும் அந்த மையம் குற்றம் சாட்டியுள்ளது. Australian International Justice மையத்தின் நிறுவனரும் முதன்மை வழக்கறிஞருமான ரவான் […]

உலகம்

பாகிஸ்தானில் சோகம் – இஸ்லாமாபாத் சென்ற 40 பேர் பலி!

  • July 3, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் இன்று பேருந்தொன்று பள்ளத்தாக்கில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பேருந்து, மாகாணத் தலைநகரான குவெட்டாவிலிருந்து தேசியத் தலைநகரான இஸ்லாமாபாத்திற்குச் சென்று கொண்டிருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் 48 பயணிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.