அமெரிக்காவின் சுதந்திர தின அணிவகுப்பு இரத்து
அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர தின அணிவகுப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.
வொஷிங்டன் டி.சியில் இன்று காலை 10.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த அணிவகுப்பானது கடுமையான வெப்ப அலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய வானிலை ஆய்வு மையம் கொலம்பியா மாநிலத்திற்கு கடுமையான வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அங்கு 110 முதல் 115 டிகிரி வெப்பநிலை பதிவாகும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முதன்மை முன்னுரிமை அளித்து, விரிவான ஆலோசனைக்குப் பிறகே இந்த ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அணிவகுப்பு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.





