செய்தி

மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்து

“ஆளும் மற்றும் எதிரணிகளுக்கு தமது அரசியல் நிலை பற்றி தெரிந்துகொள்வதற்கு மாகாணசபைத் தேர்தல் அவசியம். எனவே, அது நடத்தப்பட வேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

“ஆளும் மற்றும் எதிரணிகளுக்கு தமது அரசியல் நிலை பற்றி தெரிந்துகொள்வதற்கு மாகாணசபைத் தேர்தல் அவசியம். எனவே, அது நடத்தப்பட வேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு ,

“ பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்பில் இந்த அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. வர்த்தகர்களின் தேவைக்கேற்ப செயல்படுகின்றது.

மக்கள் யார் பக்கம் என்பதை அறிவதற்காக அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும்.

எதிரணிகளின் விமர்சனத்தை போலியான தகவல் எனக் கூறி நிராகரிப்பதைவிட, தேர்தலை நடத்தினால் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பது தெரியவரும்.

இந்த அரசாங்கம் உண்மையாக செயல்படுகின்றதெனில் மக்கள் அதற்கு ஆணை வழங்குவார்கள். போலியெனில் நிராகரிப்பார்கள். எனவே, மாகாணசபைத் தேர்தல் சிறந்த பரிசோதனைக் கருவியாக அமையும்.

ஆளும் மற்றும் எதிரணிகளுக்கு தாம் தொடர்பில் மதீப்பீட்டை செய்வதற்கு மாகாணசபைத் தேர்தல் அவசியம்.” – என்றார்; எஸ்.எம். மரிக்கார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி