உலகம்

பெரு நிலநடுக்கம் : உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • July 20, 2026
  • 0 Comments

பெருவின் மலைப்பகுதி ஒன்றில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெருவின் ஜூனினில் (Junín) உள்ள சூபாக்கா (Chupaca) நகருக்கு அருகில், 24 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் குறித்த நிலநடுக்கம் பதிவாகி 17 நிமிடங்கள் கழித்து 3.7 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணியாளர்கள் அவசர சேவைகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) கடல் பகுதியில் இரு எண்ணெய் விநியோகக் கப்பல்கள் வெடித்துச் சிதறி முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்பதாவது நாளாக திங்கள்கிழமையும் ஈரான் மீது அமெரிக்கப் படைகள் தீவிரத் தாக்குதலை நடத்தியுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்: உச்சக்கட்டத்தை எட்டிய அமெரிக்க – ஈரான் மோதல்

  • July 20, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) கடல் பகுதியில் இரு எண்ணெய் விநியோகக் கப்பல்கள் வெடித்துச் சிதறி முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்பதாவது நாளாக திங்கள்கிழமையும் ஈரான் மீது அமெரிக்கப் படைகள் தீவிரத் தாக்குதலை நடத்தியுள்ளன. ஹார்முஸ் நீரிணையின் முக்கியக் கடல்வழிப் பாதைகளில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் நோக்கில், ஈரானின் தாக்குதல் திறனைக் குறைப்பதற்காகப் “புதிய அலைத் தாக்குதல்களைத்” (New wave of strikes) தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (U.S. […]

தமிழக முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ கைது

  • July 20, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கடந்த ஜூலை 18-ம் திகதி இரவு கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி-யிடம் […]

2026 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றிபெற்ற தருணத்தில், 19 வயதான நட்சத்திர வீரர் லாமின் யமாலின் (Lamine Yamal) மிகப்பெரிய ரசிகரான அவரின் 3 வயது தம்பி மைதானத்திற்குள் ஓடிவந்து அவரைக் கட்டிப்பிடித்துத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட சம்பவம் அனைவரின் இதயங்களையும் நெகிழச் செய்துள்ளது. செய்தி விளையாட்டு

ஆடு களத்தில் பாசமழை: தம்பியைக் கட்டியணைத்து வெற்றியைக் கொண்டாடிய லாமின் யமால்

  • July 20, 2026
  • 0 Comments

2026 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றிபெற்ற தருணத்தில், 19 வயதான நட்சத்திர வீரர் லாமின் யமாலின் (Lamine Yamal) மிகப்பெரிய ரசிகரான அவரின் 3 வயது தம்பி மைதானத்திற்குள் ஓடிவந்து அவரைக் கட்டிப்பிடித்துத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட சம்பவம் அனைவரின் இதயங்களையும் நெகிழச் செய்துள்ளது. விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றிக்குப் பிறகு, சிவப்பு நிற ஸ்பெயின் சீருடை அணிந்து, கையில் உலகக்கோப்பை கோல் வலையின் சிறு […]

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் விசேட ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. அரசியல் இலங்கை செய்தி

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்: ரணில், சஜித் நேரடி சந்திப்பு

  • July 20, 2026
  • 0 Comments

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் விசேட ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில், முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்குச் செல்லவுள்ளார். சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றதன் […]

இலங்கை, யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆஸ்திரேலியா இலங்கை செய்தி

செம்மணி புதை குழி: நீதிகோரி ஆஸ்திரேலியாவில் போராட்டம்

  • July 20, 2026
  • 0 Comments

இலங்கை, யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘தமிழீழ ஆதரவு இயக்கம்’ சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு ஈழத் தமிழர்களின் நீதிப் போராட்டத்திற்கு ஆதரவுக் குரல் எழுப்பினர். செம்மணி மனிதப் புதைகுழிகள் குறித்த உண்மைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வர வேண்டும். தமிழர்களுக்கு எதிரான படுகொலைகள் குறித்துச் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைக்குக் […]

2026 (FIFA) உலகக்கோப்பை தொடரில் அதிக கோல்களை அடித்ததற்கான 'கோல்டன் பூட்' (Golden Boot) விருதை வென்றதன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டு முறை இந்த விருதைப் பெற்ற முதல் வீரர் என்ற பிரமாண்ட உலக சாதனையை பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) படைத்துள்ளார். செய்தி விளையாட்டு

சாம்பியன் கனவு கலைந்தாலும் வரலாற்று நாயகனாக நிமிர்ந்த எம்பாப்பே

  • July 20, 2026
  • 0 Comments

2026 (FIFA) உலகக்கோப்பை தொடரில் அதிக கோல்களை அடித்ததற்கான ‘கோல்டன் பூட்’ (Golden Boot) விருதை வென்றதன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டு முறை இந்த விருதைப் பெற்ற முதல் வீரர் என்ற பிரமாண்ட உலக சாதனையை பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) படைத்துள்ளார். 27 வயதான இந்த ரியல் மாட்ரிட் பார்வர்டு வீரர், இந்தத் தொடரில் விளையாடிய 8 போட்டிகளில் 10 கோல்களை விளாசி, அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸியை முந்தி முதலிடம் […]

அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி, தலைமையிலான ஸ்பெயின் அணி 2026 (FIFA) உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஸ்பெயின் கால்பந்து வரலாற்றில் இது அவர்களின் இரண்டாவது உலகக்கோப்பை மகுடமாகும். செய்தி முக்கிய செய்திகள் விளையாட்டு

அர்ஜென்டினாவை வீழ்த்தி மீண்டும் உலக்கிண்ணம் வென்றது ஸ்பெயின்

  • July 20, 2026
  • 0 Comments

அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி, தலைமையிலான ஸ்பெயின் அணி 2026 (FIFA) உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஸ்பெயின் கால்பந்து வரலாற்றில் இது அவர்களின் இரண்டாவது உலகக்கோப்பை மகுடமாகும். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், ஆட்டம் தொடங்கிய முதல் இறுதிவரை ஸ்பெயின் அணியே முழு ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும், அர்ஜென்டினாவின் அசாத்திய கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸின் தடுப்பாட்டத்தை மீறி கோல் அடிக்க ஸ்பெயின் அணி 106-வது நிமிடம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஒட்டுமொத்த […]

உலகம்

காங்கோவிற்கு பயணித்த வெளிநாட்டினர் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு

  • July 19, 2026
  • 0 Comments

எபோலா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காங்கோவிற்குச் சென்ற எந்தவொரு வெளிநாட்டவரும் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய அரசாங்கம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த 21 நாட்களில் காங்கோவில் இருந்த வெளிநாட்டுப் பிரஜைகளின் நுழைவைக் கட்டுப்படுத்துவது, கனடியர்களுக்கான பொது சுகாதார அபாயங்களைக் குறைக்கக்கூடும்” என்று கூறியுள்ளது. இந்த நடவடிக்கைகள், ஜூலை 20, முதல் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது   எபோலா பரவலைக் கட்டுப்படுத்த […]

இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரியும் பேருந்து

  • July 19, 2026
  • 0 Comments

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து ஒன்று தீவிபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து காலி நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்தே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தால் காலி நோக்கிய அதிவேக நெடுஞ்சாலைப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறே தீ விபத்துக்குக் காரணம் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி–கொழும்பு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த அந்தப் பேருந்தில், சம்பவம் நடந்த நேரத்தில் சுமார் 20 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது தீயைக் […]