இலங்கை

மஹர சிறையில் இருந்து 104 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, அதிலுள்ள மொத்தம் 104 கைதிகள் வேறு பல சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் (செயல்பாடுகள்) மற்றும் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

அதன்படி, கைதிகள் தும்பர, வெலிக்கடை, பூசா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவ ஆகிய இடங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள் அறிக்கையில், இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மஹரா சிறைச்சாலையின் நுழைவாயிலில் உள்ள சாலைத் தடுப்பிற்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மஹர சிறைச்சாலையில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு கைதிகளை உறவினர்கள் சந்திப்பது மீண்டும் தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்