இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரியும் பேருந்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து ஒன்று தீவிபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து காலி நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்தே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

இந்தச் சம்பவத்தால் காலி நோக்கிய அதிவேக நெடுஞ்சாலைப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறே தீ விபத்துக்குக் காரணம் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி–கொழும்பு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த அந்தப் பேருந்தில், சம்பவம் நடந்த நேரத்தில் சுமார் 20 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது

தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்