பெரு நிலநடுக்கம் : உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
பெருவின் மலைப்பகுதி ஒன்றில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெருவின் ஜூனினில் (Junín) உள்ள சூபாக்கா (Chupaca) நகருக்கு அருகில், 24 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் குறித்த நிலநடுக்கம் பதிவாகி 17 நிமிடங்கள் கழித்து 3.7 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணியாளர்கள் அவசர சேவைகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





