இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ கைது

தமிழக முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

தமிழக முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜூலை 18-ம் திகதி இரவு கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி-யிடம் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில், விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள எம்.எல்.ஏ-வின் வீட்டிற்கு இன்று காலை சென்ற டி.எஸ்.பி சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.

கைது தகவலறிந்து எம்.எல்.ஏ வீட்டின் முன் திரண்ட திமுகவினர், போலீசாரின் வாகனத்தை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்திய போலீசார், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ-வை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி