2026 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா அடைந்த தோல்வியால் ஏற்பட்ட வலி மிகப்பெரியது; இந்த வடு ஆறுவதற்குக் கொஞ்ச காலம் எடுக்கும் என்று நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி உருக்கமாக தெரிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

வலிக்கிறது: மீண்டெழ காலகெடுக்கும் – மெஸ்ஸி உருக்கம்

  • July 21, 2026
  • 0 Comments

2026 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா அடைந்த தோல்வியால் ஏற்பட்ட வலி மிகப்பெரியது; இந்த வடு ஆறுவதற்குக் கொஞ்ச காலம் எடுக்கும் என்று நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி உருக்கமாக தெரிவித்துள்ளார். எனினும், தொடர்ச்சியாக இரண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளுக்கு தகுதி பெற்றதே ஒரு மிகப்பெரிய சாதனை எனக் குறிப்பிட்ட அவர், தங்களுக்கு ஆதரவளித்த அர்ஜென்டினா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து லியோனல் மெஸ்ஸி தனது செய்தியில் கூறியிருப்பதாவது: ” இந்தத் தோல்வியால் ஏற்பட்ட வலி […]

இலங்கை

சிறைச்சாலைகளை நிர்மாணிப்பது வெற்றியல்ல, அது சமூக சீர்கேட்டின் அடையாளம் – நாமல்

  • July 21, 2026
  • 0 Comments

சிறைச்சாலைகளை நிர்மாணிப்பதும், சிறைச்சாலைகளை நிரப்புவதும் அரசாங்கத்தின் வெற்றியல்ல, அது சமூக சீர்கேட்டின் அடையாளம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான விபரங்களை சமூக ஊடகங்களை பார்த்தே குறிப்பிட வேண்டும் என்று நீதியமைச்சர் குறிப்பிடும் நிலைக்கு நிர்வாக கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது. சிறைச்சாலை நெரிசலுக்கு […]

இலங்கையை சேர்ந்தவர்களின் சுற்றுலா நுழைவிசைவு விண்ணப்பங்களை தாய்வான் அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக தாய்வான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கான சுற்றுலா விசாவை நிறுத்தியது தாய்வான்

  • July 21, 2026
  • 0 Comments

இலங்கையை சேர்ந்தவர்களின் சுற்றுலா நுழைவிசைவு விண்ணப்பங்களை தாய்வான் அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக தாய்வான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. தாய்வான் அரசாங்கத்தின் அண்மைய நுழைவிசைவு கொள்கையின்படி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கை குடிமக்களிடமிருந்து சுற்றுலா விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்வான் அரசாங்க நிறுவனத்தின் அதிகாரபூர்வ அழைப்பின் பேரில் பயணம் மேற்கொள்வது, பரிமாற்ற நடவடிக்கைகள், உறவினர்களை (மூன்றாம் நிலை உறவுமுறைக்குள்) சந்திப்பது, வணிகம், தாய்வானில் ஒரு கப்பலில் இணைவது அல்லது மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்காக […]

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆபத்து: பீரிஸ் எச்சரிக்கை அரசியல் இலங்கை செய்தி

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆபத்து: பீரிஸ் எச்சரிக்கை

  • July 21, 2026
  • 0 Comments

“உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்பாமல், நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க அவசரப்படும் அரசின் போக்கு, இலங்கையின் நீதித்துறை மீதான சர்வதேச நம்பிக்கையைச் சீர்குலைத்து ஜெனிவாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எந்தவொரு ஜனநாயக நாடும் இத்தகைய அரசமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கு […]

அமெரிக்கர்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்களை கனடா சமமாக நடத்தவில்லை என்று கூறி, அதற்குப் பதிலடியாக கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பரந்த அளவிலான பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரியை விதித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கனடா பொருட்களுக்கு 50 சதவீத வரி: ட்ரம்ப் அதிரடி

  • July 21, 2026
  • 0 Comments

அமெரிக்கர்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்களை கனடா சமமாக நடத்தவில்லை என்று கூறி, அதற்குப் பதிலடியாக கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பரந்த அளவிலான பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரியை விதித்துள்ளார். மதுபானம் மற்றும் ஹாக்கி மட்டைகள் (hockey sticks) போன்ற அன்றாட நுகர்வோர் பொருட்கள் முதல் சிமெண்ட் போன்ற தொழில்துறை பொருட்கள் வரை இதில் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஆற்றல் (energy), பொட்டாஷ் (potash), முக்கிய கனிமங்கள் மற்றும் மீன் […]

ஐரோப்பா

பிரதமராக பதவியேற்றப்பின் முதலாவதாக ட்ரம்பிற்கு அழைப்பேற்படுத்திய பர்ன்ஹாம்

  • July 20, 2026
  • 0 Comments

ஆண்டி பர்ன்ஹாம் அதிகாரப்பூர்வமாக பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றப்பின் முதலாவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். புதிய பிரதமரின் தாராளவாதக் கொள்கைகள் மற்றும் வடகடல் எண்ணெய், எரிவாயு துளையிடும் பணிகளுக்கு அவர் அளிக்கக்கூடிய ஆதரவு குறித்து இதன்போது ட்ரம்ப் கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பை தொடர்ந்து ஐரோப்பிய தலைவர்கள், வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதுடன், ஐரோப்பிய ஒன்றியம்-ஐக்கிய இராச்சிய உறவுகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஆஸ்திரேலியப் பிரதமர் […]

ஐரோப்பா

ஒடேசா கடற்கரையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – 09 மாலுமிகள் உள்ளிட்ட 10 பேர் பலி

  • July 20, 2026
  • 0 Comments

உக்ரைன் நகரமான ஒடெசாவின் கடற்கரைக்கு அப்பால் பயணித்த சரக்கு கப்பல் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கினியா-பிசாவ் கொடியை ஏந்திச் சென்ற கப்பல் மீது ரஷ்யா குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல்  மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இரவு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஒன்பது மாலுமிகளும், விமானி ஒருவரின் சடலங்கள்  மீட்கப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. சமீபத்திய வாரங்களில், ஒடெசா பகுதி தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இப்பகுதியில் […]

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பிரதிநிதிகள் குழுவினர், நாளை மறுதினம் புதன்கிழமை (22) காலை 09 மணிக்குச் செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரில் சென்று பார்வையிடவுள்ளனர். இலங்கை கல்வி முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழியை பார்வையிட ஐரோப்பிய குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி

  • July 20, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பிரதிநிதிகள் குழுவினர், நாளை மறுதினம் புதன்கிழமை (22) காலை 09 மணிக்குச் செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரில் சென்று பார்வையிடவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கான அனுமதியைக் கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்விண்ணப்பத்தைப் பரிசீலித்த நீதிமன்றம், பார்வையிடுவதற்கான அனுமதியை இன்று திங்கட்கிழமை வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, திட்டமிட்டபடி நாளை மறுதினம் புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் […]

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 38 ஆவது நாளான இன்று 08 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 08 எலும்புக்கூடுகள் இன்று அடையாளம்

  • July 20, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 38 ஆவது நாளான இன்று 08 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 6 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தம் 92 நாட்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள அகழ்வுப் பணிகளின் மூலம் இதுவரையில் 454 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 440 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.  

உலகம்

ஜப்பானில் முதல் முறையாக மகப்பேறு விடுப்பு எடுத்த மேயர்

  • July 20, 2026
  • 0 Comments

ஜப்பானில் முதல் முறையாக மேயர் ஒருவர் மகப்பேறு விடுப்பு எடுத்துள்ளார். மேற்கு ஜப்பானில் சுமார் 69,000 மக்கள் வசிக்கும் யவாட்டா நகரின் மேயரான ஷோகோ கவாட்டா (Shoko Kawata),   இன்றைய தினம் மகப்பேறு விடுப்பை எடுத்துள்ளார். இது உள்ளுர் சமூகத்தினர் மத்தியில் சில விமர்சனங்களை கொண்டுவந்துள்ளதோடு, சர்வதேச ஊடகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஷோகோ கவாட்டா (Shoko Kawata),  யவாட்டா நகர ஊழியர்களுக்கு 16 வார மகப்பேறு விடுப்பு உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், மேயர் பதவிக்கு […]