ஐரோப்பா

ஒடேசா கடற்கரையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – 09 மாலுமிகள் உள்ளிட்ட 10 பேர் பலி

உக்ரைன் நகரமான ஒடெசாவின் கடற்கரைக்கு அப்பால் பயணித்த சரக்கு கப்பல் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கினியா-பிசாவ் கொடியை ஏந்திச் சென்ற கப்பல் மீது ரஷ்யா குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேடுதல்  மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இரவு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஒன்பது மாலுமிகளும், விமானி ஒருவரின் சடலங்கள்  மீட்கப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

சமீபத்திய வாரங்களில், ஒடெசா பகுதி தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

இப்பகுதியில் ஜுலை மாதம் மட்டும் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததாக ஆளுநர் ஓலே கிப்பர் அறிவித்துள்ளார்.

இதேவேளை கருங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீதான ரஷ்யத் தாக்குதல்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்