உலகம்

ஜப்பானில் முதல் முறையாக மகப்பேறு விடுப்பு எடுத்த மேயர்

ஜப்பானில் முதல் முறையாக மேயர் ஒருவர் மகப்பேறு விடுப்பு எடுத்துள்ளார்.

மேற்கு ஜப்பானில் சுமார் 69,000 மக்கள் வசிக்கும் யவாட்டா நகரின் மேயரான ஷோகோ கவாட்டா (Shoko Kawata),   இன்றைய தினம் மகப்பேறு விடுப்பை எடுத்துள்ளார்.

இது உள்ளுர் சமூகத்தினர் மத்தியில் சில விமர்சனங்களை கொண்டுவந்துள்ளதோடு, சர்வதேச ஊடகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஷோகோ கவாட்டா (Shoko Kawata),  யவாட்டா நகர ஊழியர்களுக்கு 16 வார மகப்பேறு விடுப்பு உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், மேயர் பதவிக்கு அத்தகைய நெறிமுறை எதுவும் இல்லை என்று  கூறினார்.  இதனால், அவரே ஒரு புதிய நெறிமுறையை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“மகப்பேறு விடுப்பு எடுக்கும் முதல் மேயர் நான்தான் என்பதை அறிந்தபோது எனக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சனே டகாயிச்சி ஜப்பானின் முதல் பெண் பிரதமரான போதிலும், அந்நாட்டில்  மிகப்பெரிய பாலின இடைவெளி, குறிப்பாக அரசியலில் ஆண்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்