ஐரோப்பா முக்கிய செய்திகள்

அயர்லாந்தில் தாக்குதலுக்கு திட்டம் : வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்துடன் இருவர் கைது

  • July 24, 2026
  • 0 Comments

வட அயர்லாந்துடனான எல்லைக்கு அருகே வெடிகுண்டு நிரம்பிய வாகனத்தை செலுத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரிடம் துப்பறிவாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் 20 வயது நிரம்பிய பெண் ஒருவரும், 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும்  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் பயணித்த வாகனம்  வெடிபொருள் அகற்றும் குழுவின் உதவியுடன் ஆய்வு உட்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாதுகாப்பு காரணம் கருதி முடிவுகளை அரசாங்கம் வெளியிடவில்லை. வட […]

உலகம்

ஐரோப்பாவிற்கு கடத்தப்பட இருந்த 317 மில்லியன் டொலர் மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்

  • July 24, 2026
  • 0 Comments

ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்த சுமார் 317 மில்லியன் டொலர் மதிப்புடைய கொக்கைன் போதைப் பொருட்களை லைபீரிய அதிகாரிகள்  பறிமுதல் செய்துள்ளனர். இது லைபீரியாவின் வரலாற்றில் பதிவான மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டைகளில் ஒன்று எனவும் அதிகாரிகள் விவரித்துள்ளனர். தலைநகர் மன்ரோவியாவிற்கு (Monrovia) கிழக்கே உள்ள டுவாசோன் (Duazon)  நகரில் 3,971 கிலோ கொக்கைகன் போதைப் பொருட்களை கைப்பற்றியதோடு, அவற்றை ஐரோப்பாவிற்கு கடத்த முயன்ற இரு சந்தேகநபர்களையும் கைது செய்தனர். ஸ்பெயின் மற்றும் கொலம்பியா ஆகிய இரு நாடுகளின் கடவுச்சீட்டுகளையும் […]

இலங்கைக்கான சீனத் தூதுவர் பதவியிலிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் கீ சென்ஹொங் , சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை செய்தி

இலங்கையில் இருந்து விடைபெறுகிறார் சீனத் தூதுவர்

  • July 24, 2026
  • 0 Comments

இலங்கைக்கான சீனத் தூதுவர் பதவியிலிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் கீ சென்ஹொங் , சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற சந்தித்து கலந்துரையாடினார். தூதுவரை வரவேற்ற சபாநாயகர், இலங்கையில் தூதுவராகப் பணியாற்றிய காலப்பகுதியில் அவர் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவைக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கு தூதுவர் வழங்கிய பங்களிப்பையும் பாராட்டினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் தூதுவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும், அவரது சேவை இரு நாடுகளுக்கும் […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கித் தவிக்கும் சுமார் 6,000 மாலுமிகளை மீட்க ஐ.நா அவசரக் கோரிக்கை

  • July 24, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கித் தவிக்கும் சுமார் 6,000 மாலுமிகளை மீட்டுத் தாயகம் திரும்ப உதவுமாறு, மத்தியக்கிழக்கில் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை  கேட்டுக்கொண்டுள்ளது. அந்த நீர்வழியில் “கடுமையான மனிதாபிமான மற்றும் மனித உரிமை நெருக்கடியை” எதிர்கொண்டுள்ள,  ஆயிரக்கணக்கான மாலுமிகளின் அவல நிலையைச் சரிசெய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பின் தலைவர், வோல்கர் டர்க் அழைப்பு  விடுத்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஷபியா மன்டூ கூறினார். ஜெனீவாவில் இன்று நடந்த செய்தியாளர் […]

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் 'அரசியல் கைதி' என்ற பதத்துக்கு எத்தகைய பொருள்கோடலும் வழங்கப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு: கஜேந்திரகுமார் ஆதரவாக வாக்களிப்பு

  • July 24, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தில் இன்று தோற்கடிக்கப்பட்டது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 36 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 152 உறுப்பினர்களும் வாக்களித்தனர். நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. எதிரணியிலுள்ள மலையக தமிழ் எம்.பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். இலங்கை தமிழரசுக் கட்சி […]

ஐரோப்பா

ருமேனியாவிற்குள் ஊடுருவிய போர் விமானம் – ஆபத்தில் நேட்டோ நாடுகள்

  • July 24, 2026
  • 0 Comments

தனது வான்வெளிக்குள் ஊடுருவிய F-16 போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ருமேனிய ஜனாதிபதி நிகுசர் டான் (Nicusor Dan) இன்று தெரிவித்துள்ளார். நேட்டோ உறுப்பு நாடான ருமேனியாவில் பல சந்தர்ப்பங்களில் இதுபோன்ற ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும், அந்நாடு பதில் நடவடிக்கை எடுப்பது இதுவே முதல் முறையாகும். அந்த ட்ரோன் எங்கிருந்து வந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் நிகுசர் டான் தெரிவித்துள்ளார். போலந்து மற்றும் பால்டிக் நாடுகளும் […]

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க, மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை வரை கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. இந்தியா செய்தி

இந்திய கல்வி அமைச்சர் ராஜினாமா? நாளைவரை அவகாசம்

  • July 24, 2026
  • 0 Comments

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க, மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை வரை கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இளைஞர்களும் […]

உலகம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய வீரர் மரணம் – பதிலடிக்கு தயாராகும் நெதன்யாகு

  • July 24, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இடம்பெற்ற வன்முறையில் இஸ்ரேலிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து உறுதியான பதிலடி கொடுப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று உறுதி மொழிந்துள்ளார். இது தொடர்பில் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், “பயங்கரவாதிகள் மற்றும் அவர்களைத் திட்டமிட்டு ஆதரிப்பவர்களுக்கு எதிராக முழு பலத்துடன் நடவடிக்கை எடுப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். டெல் பகுதியில் இடம்பெற்ற இந்த வன்முறையில் நால்வர் கொல்லப்பட்டதுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஹவத் […]

இந்தியா செய்தி

மத்திய அமைச்சர் பதவி விலகும்வரை பேச்சு கிடையாது: ராகுல் காந்தி திட்டவட்டம்

  • July 24, 2026
  • 0 Comments

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி நீக்கம் செய்யப்படும் வரை, நாடாளுமன்றப் பேச்சுவார்த்தையிலோ அல்லது விவாதத்திலோ எதிர்க்கட்சிகள் பங்கேற்காது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்திருந்தார். எனது பெயரைக் குறிப்பிட்டு அவர் அழைத்ததால் நான் பதிலளிக்க முயன்றபோது எனது மைக் அணைக்கப்பட்டது; பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. […]

உலகம்

இராணுவத்தை விரிவாக்க நைஜீரிய ஜனாதிபதி ஒப்புதல்

  • July 24, 2026
  • 0 Comments

நைஜீரியாவில் இராணுவத்தை பலப்படுத்த அந்நாட்டு ஜனாதிபதி போலா தினுபு ( Bola Tinubu) நடவடிக்கை எடுத்துள்ளார். தொடர்ச்சியான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் இராணுவத்தை எட்டிலிருந்து 12 பிரிவுகளாக விரிவுபடுத்தவும், கூடுதலாக 28,000 வீரர்களைச் சேர்க்கவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கமைய மகுர்தி (Makurdi), இலாரின் (Ilorin), ஜலிங்கோ (Jalingo) மற்றும் பெனின் சிட்டி (Benin City) ஆகிய இடங்களில் நான்கு புதிய இராணுவப் பிரிவுகளை அமைக்க அவர் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தித் […]