ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய வீரர் மரணம் – பதிலடிக்கு தயாராகும் நெதன்யாகு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இடம்பெற்ற வன்முறையில் இஸ்ரேலிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து உறுதியான பதிலடி கொடுப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று உறுதி மொழிந்துள்ளார்.
இது தொடர்பில் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், “பயங்கரவாதிகள் மற்றும் அவர்களைத் திட்டமிட்டு ஆதரிப்பவர்களுக்கு எதிராக முழு பலத்துடன் நடவடிக்கை எடுப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டெல் பகுதியில் இடம்பெற்ற இந்த வன்முறையில் நால்வர் கொல்லப்பட்டதுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹவத் கிலாட் (Havat Gilad) அருகே மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலியப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதிக்கு இராணுவத்தினர் அனுப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை இராணுவத்தினர் தேடி வருவதாகவும், சம்பவ இடம்பெற்ற பகுதியை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




