இந்திய கல்வி அமைச்சர் ராஜினாமா? நாளைவரை அவகாசம்
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க, மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை வரை கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இளைஞர்களும் போராட்டத்தில் குறித்துள்ளனர். இந்திய பிரதமராக மூன்றாவது முறை மோடி பதவி வகிக்கின்றார். இம்முறைதான் அவர் இவ்வாறானதொரு கடும் அரசியல் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார் எனக் கூறப்டுகின்றது.
இந்நிலையில் இக்கோரிக்கை தொடர்பாகத் தங்களுக்குள் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும், இது குறித்து இறுதி முடிவு அறிவிக்க அவகாசம் தேவைப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.




