பொலிஸ் ஊரடங்கு நீக்கம்
மஹர சிறைச்சாலை கலவரத்தை தொடர்ந்து நேற்று அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த இந்த ஊரடங்கு, மஹாரா சிறை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி – மேற்கு, 246 C கெண்டலியத்த வீதி – வடக்கு, மற்றும் 181 G – தம்புவ ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.




