ஐரோப்பா முக்கிய செய்திகள்

அயர்லாந்தில் தாக்குதலுக்கு திட்டம் : வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்துடன் இருவர் கைது

வட அயர்லாந்துடனான எல்லைக்கு அருகே வெடிகுண்டு நிரம்பிய வாகனத்தை செலுத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரிடம் துப்பறிவாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் 20 வயது நிரம்பிய பெண் ஒருவரும், 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும்  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் பயணித்த வாகனம்  வெடிபொருள் அகற்றும் குழுவின் உதவியுடன் ஆய்வு உட்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாதுகாப்பு காரணம் கருதி முடிவுகளை அரசாங்கம் வெளியிடவில்லை.

வட அயர்லாந்தில் தாக்குதல் நடத்துவதற்காக எல்லையைக் கடந்து காரில் வெடிகுண்டு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என  அதிகாரிகள் நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்