மேற்குக் கரையில் வன்முறை வெடிப்பு: ஊரடங்கு உத்தரவு அமுல்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய இராணுவம் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதுடன் ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. நப்லஸ் (Nablus) நகரத்தின் தென்மேற்கே இஸ்ரேலியப் படைகளும் குடியேற்றவாசிகளும் பாலஸ்தீனர்களுடன் மோதியதில், வெள்ளிக்கிழமை நான்கு பாலஸ்தீனர்களும் இரண்டு இஸ்ரேலிய வீரர்களும் கொல்லப்பட்டனர். சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றப் பகுதியான ‘ஹவத் கிலாத்’திற்கு (Havat Gilad) அருகில் உள்ள ‘டால்’ (Tal) நகரை இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தாக்கியபோதே இந்த வன்முறை வெடித்ததாக பாலஸ்தீன வட்டாரங்கள் […]













