அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு: கஜேந்திரகுமார் ஆதரவாக வாக்களிப்பு

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் 'அரசியல் கைதி' என்ற பதத்துக்கு எத்தகைய பொருள்கோடலும் வழங்கப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தில் இன்று தோற்கடிக்கப்பட்டது.

இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 36 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 152 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

எதிரணியிலுள்ள மலையக தமிழ் எம்.பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை