உலகம் செய்தி

முடிவுக்கு வருகிறது ஈரான், அமெரிக்கா போர்? இன்று முக்கிய தீர்மானம்!

  • May 25, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வலுவான திட்ட வரைவு தற்போது தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான உடன்படிக்கை இன்று திங்கட்கிழமை எட்டப்படலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மார்கோ ரூபியோ, புதுடெல்லியில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். “பேச்சுவார்த்தைகள் இன்னும் முன்னேற்றக் கட்டத்திலேயே உள்ளன. நேற்று இரவே சில நல்ல செய்திகள் வெளியாகும் என […]

இலங்கை செய்தி

இலங்கை பொலிஸாருக்கு 134 வாகனங்களை வழங்கியது இந்தியா!

  • May 25, 2026
  • 0 Comments

இலங்கை பொலிஸின் பயன்பாட்டிற்காக, இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் (Single Cabs) ரக வாகனங்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (25) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இதற்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதுடன், இந்த கெப் ரக வாகனங்கள் வட மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன. எதிர்காலத்திலும் இலங்கைக்கு இவ்வாறான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் […]

உலகம் செய்தி

ஈரான் பயணத்தை முடித்துக்கொண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதி சீனா பயணம்!

  • May 25, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் பிரதமருடன் அந்நாட்டு ராணுவத் தளபதியான ஆசிம் முனிரும் சீனாவிற்கு சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றமான சூழலைத் தணிக்கும் சமாதான முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படுகிறது. இதில் குறிப்பாக பாகிஸ்தான் ராணுவ தளபதியும் முக்கிய பங்கை வகிக்கின்றார். கடந்த வாரம் ஈரானுக்குச் சென்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி, அமைதி முயற்சி குறித்து விரிவான பேச்சுகளில் ஈடுபட்டார். இந்நிலையிலேயே அவர் தற்போது சீனா சென்றுள்ளார். போர் நிறுத்த […]

செய்தி விளையாட்டு

IPL 2026: play-off சுற்று நாளை ஆரம்பம்!

  • May 25, 2026
  • 0 Comments

IPL 2026 கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. play-off சுற்று நாளை (26) ஆரம்பமாகின்றது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் play-off சுற்றுக்கு முதன் மூன்று அணிகளாக முன்னேறின. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை அணியுடன், ராஜஸ்தான் அணி மோதியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 30 ஓட்டங்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் […]

உலகம் செய்தி

ட்ரம்பின் மிரட்டல்களுக்கு அடிபணியோம்: ஈரான் திட்டவட்டம்!

  • May 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்குத் தனது நாடு ஒருபோதும் பணியாது என்று ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் Ebrahim Rezaei சூளுரைத்துள்ளார். ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் ஈரானின் நிலைப்பாடு எதிர்த் தரப்பின் நடவடிக்கைகளுக்கு ஏற்பவே அமையும் என்று அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைகளை வெறும் வெற்று மிரட்டல்கள் என்று சுட்டிக்காட்டியஅவர், காலம் அமெரிக்காவிற்கு எதிராகவே நகர்வதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா உடன்படிக்கையை விரும்பினால் நேர்மையாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இல்லையெனில் எரிபொருள் விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வலுக்கட்டாயமான […]

இலங்கை செய்தி

காவல்துறைக்கு இடையூறு: விமல் வீரவன்ச கைது!

  • May 25, 2026
  • 0 Comments

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டுள்ளார். பத்தரமுல்லையில் உள்ள படையினர் நினைவு முற்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து காவல்துறையினரின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தார் என விமல் வீரவன்சமீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. தேசிய ராணுவ சேவை அதிகார சபையின் தலைவரால் இது தொடர்பில் தலங்கம காவல்துறையில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக விமல் வீரவன்ச, இன்று தலங்கம காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் […]

இலங்கை

2.5 மில்லியன் டொலர் மாயம் : 200 டொலர்களை மட்டும் மீட்க நடவடிக்கை!

  • May 25, 2026
  • 0 Comments

திறைசேரியில் இருந்து குற்றவாளிகளின் கைகளுக்கு கிடைக்கப்பெற்ற 2.5 மில்லியன் டொலரில் இருந்து வெறும் 200 டொலர்களே மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சைபர் மோசடியால் மாயமாகிய பணத்தை மீட்க இலங்கை அதிகாரிகள் அமெரிக்காவிடம் உதவி கோரியுள்ளனர். இதற்கமைய அமெரிக்க அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி,  திருடப்பட்ட நிதியின் ஒரு பகுதி அமெரிக்காவின் டெலவெயர் மாகாணத்தில் உள்ள ஒரு வங்கி கணக்கிற்கும், மீதமுள்ள நிதி மற்றொரு மாகாணத்தில் உள்ள வங்கி கணக்கிற்கும் மாற்றப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், டெலவெயர் மாகாண வங்கி கணக்கு […]

இந்தியா உலகம் செய்தி

குவாட் வெளிவிவகார அமைச்சர்கள் டெல்லியில் சங்கமம்! சீனா கழுகுப்பார்வை!

  • May 25, 2026
  • 0 Comments

குவாட் Quad அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று (25) இந்தியாவில் நடைபெறுகின்றது. இந்தோ – பசுபிக் கடல் பகுதியில் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை நிலைநாட்டும் நோக்கிலேயே குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன. இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்குரிய ஒரு கூட்டமைப்பாகவும் இது கருதப்படுகின்றது. இந்நிலையில், குவாட் அமைப்பின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு […]

அரசியல் இலங்கை செய்தி

முதுகெலும்பிருந்தால் வடக்கில் தேர்தலை நடத்தவும்: மஹிந்த அணி சவால்!

  • May 25, 2026
  • 0 Comments

“தேர்தலை எந்தகாலப்பகுதியில் நடத்துவது தொடர்பில் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜே.வி.பியின் செயலாளருக்கு எவ்வாறு கிடைக்கப்பெற்றது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ மாகாணசபைத் தேர்தல் நடக்காது என ஜே.வி.பியின் செயலாளர் கூறியுள்ளார். தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசாங்கம் முடிவுகளை எடுக்கலாம். ஆனால் இது விடயத்தில் ஜே.வி.பி. செயலாளருக்கு உள்ள அதிகாரம் என்ன? […]

செய்தி விளையாட்டு

கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி!

  • May 25, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 70 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. பின்னர் 204 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி […]