இலங்கை செய்தி

இலங்கை பொலிஸாருக்கு 134 வாகனங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை பொலிஸின் பயன்பாட்டிற்காக, இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் (Single Cabs) ரக வாகனங்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (25) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இதற்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதுடன், இந்த கெப் ரக வாகனங்கள் வட மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

எதிர்காலத்திலும் இலங்கைக்கு இவ்வாறான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கம் மேற்கொண்ட இந்த அன்பளிப்பைப் பாராட்டி, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு நினைவுப் பரிசொன்று வழங்கி வைக்கப்பட்டது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!