காவல்துறைக்கு இடையூறு: விமல் வீரவன்ச கைது!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள படையினர் நினைவு முற்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து காவல்துறையினரின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தார் என விமல் வீரவன்சமீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
தேசிய ராணுவ சேவை அதிகார சபையின் தலைவரால் இது தொடர்பில் தலங்கம காவல்துறையில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக விமல் வீரவன்ச, இன்று தலங்கம காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.




