உலகம்

குவாத்தமாலாவில் வெடிக்கும் தருவாயில் எரிமலை- ஆரஞ்சு எச்சரிக்கை

குவாத்தமாலாவில் (Guatemalan) ஃபியூகோ (Fuego) எரிமலை சாம்பலை கக்கி வருகின்ற நிலையில், அதன் அருகில் வசிக்கும் மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சான் ஜுவான் அலோட்டெனாங்கோ (San Juan Alotenango) நகராட்சியில் உள்ள எல் போர்வெனீர் ( El Porvenir) மற்றும் லாஸ் லஜிடாஸ் ( Las Lajitas) ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எரிமலைச் செயல்பாடு தீவிரமடைந்தால், இந்த ஓட்டங்கள் மேலும் விரிவடையும்  என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் எரிமலைக்கு மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் சுமார்  100 கி.மீ (62 மைல்கள்) வரையிலான பகுதிகளை சாம்பல் புகை ஆக்கிரமிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இன்றைய தினம் பாதுகாப்பு அபாயம் குறித்த ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்