ஐரோப்பா

உக்ரைனுக்கு ஆதரவாக போரிட்ட பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு!

  • May 25, 2026
  • 0 Comments

உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் இடம்பெற்று வரும் போரில் பிரித்தானிய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 23 வயதான அய்ர்டன் ரெட்ஃபியர்ன் (Ayrton Redfearn) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ரெட்ஃபியர்ன், இதற்கு முன்னர் டார்குவே விமானப் படை மாணவராகவும், ராயல் ஏர் ஃபோர்ஸிலும் (RAF) பணியாற்றியுள்ளார். அவர் 2025 ஆம் ஆண்டில்  உக்ரைனிய இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு சிறப்புப் பிரிவில் இணைந்திருந்தார். இதேவேளை அவரின் மரணத்தை வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம் செய்தி

ஈரான் சபாநாயகராக Qalibaf மீண்டும் தெரிவு!

  • May 25, 2026
  • 0 Comments

ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முகமது பாகர் கலிபாப் (Mohammad Bagher Qalibaf) இன்று திங்கட்கிழமை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஈரான் அரச ஊடகம் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. சபாநாயகர், பிரதி சபாநாயகர்கள், ஆறு செயலாளர்கள் மற்றும் மூன்று அவதானிப்பாளர்கள் (Observers) உட்பட நாடாளுமன்றத்தின் 12 நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடத்தப்பட்டது. நாடாளுமன்றப் பிரதிநிதிகள் ரகசிய வாக்குப்பதிவு மூலம் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர் என ஈரான் நாட்டு ஊடகமான IRIB தெரிவித்துள்ளது. ஈரானின் மிக முக்கிய […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியா திரும்பும் “IS மணப்பெண்கள்” – பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்!

  • May 25, 2026
  • 0 Comments

IS பயங்கரவாதப் அமைப்புடன் தொடர்புடைய ஆஸ்திரேலியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய மேலும் ஒரு குழுவினர் நாளை (26) தாயகம் திரும்பவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 7 பெண்கள் மற்றும் 13 குழந்தைகள் அடங்கிய இந்த குழுவினர் ஆஸ்திரேலியா திரும்புவதற்கான விமானப் பதிவுகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளனர். இக்குழுவைச் சேர்ந்த 9 பேர் மெல்போர்ன் நகரிற்கும், ஏனையோர் சிட்னி நகரிற்கும் பயணிக்கவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவர்களில் சில பெண்கள் ஆஸ்திரேலியாவை வந்தடைந்ததும் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடலாம் என […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வேலையின்மையை குறைத்தால் நலத்திட்டச் செலவும் குறையும் – JRF ஆய்வு

  • May 25, 2026
  • 0 Comments

நலத்திட்ட உதவிகளைக் குறைப்பதை விட, வேலையின்மைக்கான அடிப்படை காரணங்களைத் தீர்ப்பதே அரசின் நலத்திட்டச் செலவைக் குறைக்கும் சிறந்த வழி என Joseph Rowntree (ரவுன்ட்ரீ) அறக்கட்டளை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, வேலை செய்யும் வயதுடைய மக்களில் 80 வீதமானோரை வேலைவாய்ப்பில் இணைக்கும் அரசாங்க இலக்கு நிறைவேற்றப்பட்டால், யுனிவர்சல் கிரெடிட் திட்டச் செலவில் சுமார் £10 பில்லியன் பவுண்ட் குறைப்பு ஏற்படும என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய செலவின் எட்டில் ஒரு பங்காகும் என பொருளாதார […]

இலங்கை செய்தி

08 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை: 31,078 பேர் பாதிப்பு!

  • May 25, 2026
  • 0 Comments

இலங்கையில் வவுனியா உட்பட 08 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 31 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 984 குடும்பங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாகவே பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 860 வீடுகள் பகுதியளவும், 2வீடுகள்முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 446 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 724 பேர் 18 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 204 […]

ஐரோப்பா செய்தி

போர் தயார்நிலை குறித்து வழிகாட்டல் வெளியிடவில்லையென பிரித்தானிய அரசு மீது குற்றச்சாட்டு

  • May 25, 2026
  • 0 Comments

போருக்கு நாடு தயாராக இருக்க வேண்டும் என கடந்த ஆண்டு எச்சரித்திருந்தாலும், அவசரநிலை அல்லது ஆயுதத் தாக்குதல் ஏற்பட்டால் மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான பொது வழிகாட்டுதலை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் தேசிய தயார்நிலை தொடர்பான விவாதங்கள் தற்போது அரசாங்க மட்டத்தில் மறைமுகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், நாடு தாக்குதலுக்கு உள்ளானால் முக்கிய பங்கு வகிக்க வேண்டிய உள்ளுராட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வ […]

உலகம்

காங்கோ, உகாண்டாவில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும் தாய்லாந்து!

  • May 25, 2026
  • 0 Comments

தாய்லாந்து அரசாங்கம் காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவிலிருந்து வரும் பயணிகளுக்கான பரிசோதனை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக அறிகுறியற்ற பயணிகளுக்கு 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலையும் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ இல்லாத எபோலாவின் புண்டிபுக்யோ வகையை,    உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக WHO  அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. WHOவின் அறிப்பை தொடர்ந்து தாய்லாந்தின் நோய்க் கட்டுப்பாட்டுத் துறை, காங்கோ மற்றும் உகாண்டாவை எபோலா பாதிப்பு மண்டலங்களாக வகைப்படுத்தியுள்ளது. மேலும், ஒரு […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க வேண்டியது அரசின் பொறுப்பு!

  • May 25, 2026
  • 0 Comments

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை கண்டறிய வேண்டியது அரசின் பொறுப்பாகும். இது விடயம் தொடர்பில் பொறுப்புகூறல் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஜித் பி பெரேரா எம்.பி. வலியுறுத்தினார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு , “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள், பிரதான சூத்திரதாரிகள் மற்றும் தொடர்புடையோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என நாம் எமது […]

உலகம்

பங்களாதேஷில் கோர விபத்து – 15 பேர் ஸ்தலத்தில் பலி!

  • May 25, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் இன்று அதிகாலை லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் டாக்காவிலிருந்து 83 கி.மீ தொலைவில் உள்ள டாங்கைல் மாவட்டத்தின் சோரடோயில் (Soratoil) பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

உலகம்

பிலிப்பைன்ஸில் கட்டுமானத்தளம் இடிந்து விழுந்து விபத்து – 03 பேர் பலி, பலர் மாயம்!

  • May 25, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் வார இறுதியில் கட்டுமானத் தளம் ஒன்று இடிந்து விழுந்ததில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பம்பாங்காவின் (Pampanga) ஏஞ்சல்ஸ் நகரில் (Angeles City), இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. மீட்பு பணியாளர்கள் இன்றைய தினம் இரண்டு பேரை   மீட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகவும்,  மற்றொருவர் மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தலைமையிலான நூற்றுக்கணக்கான மீட்புப் படையினர், மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]