இலங்கை

2.5 மில்லியன் டொலர் மாயம் : 200 டொலர்களை மட்டும் மீட்க நடவடிக்கை!

திறைசேரியில் இருந்து குற்றவாளிகளின் கைகளுக்கு கிடைக்கப்பெற்ற 2.5 மில்லியன் டொலரில் இருந்து வெறும் 200 டொலர்களே மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சைபர் மோசடியால் மாயமாகிய பணத்தை மீட்க இலங்கை அதிகாரிகள் அமெரிக்காவிடம் உதவி கோரியுள்ளனர்.

இதற்கமைய அமெரிக்க அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி,  திருடப்பட்ட நிதியின் ஒரு பகுதி அமெரிக்காவின் டெலவெயர் மாகாணத்தில் உள்ள ஒரு வங்கி கணக்கிற்கும், மீதமுள்ள நிதி மற்றொரு மாகாணத்தில் உள்ள வங்கி கணக்கிற்கும் மாற்றப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், டெலவெயர் மாகாண வங்கி கணக்கு முற்றிலும் காலியாக உள்ளதாகவும், இரண்டாவது கணக்கில் வெறும் 200 டொலர்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த 200 டொலரை மீட்பதற்கான நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!