ட்ரம்பின் மிரட்டல்களுக்கு அடிபணியோம்: ஈரான் திட்டவட்டம்!
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்குத் தனது நாடு ஒருபோதும் பணியாது என்று ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் Ebrahim Rezaei சூளுரைத்துள்ளார்.
ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் ஈரானின் நிலைப்பாடு எதிர்த் தரப்பின் நடவடிக்கைகளுக்கு ஏற்பவே அமையும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைகளை வெறும் வெற்று மிரட்டல்கள் என்று சுட்டிக்காட்டியஅவர், காலம் அமெரிக்காவிற்கு எதிராகவே நகர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா உடன்படிக்கையை விரும்பினால் நேர்மையாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இல்லையெனில் எரிபொருள் விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வலுக்கட்டாயமான அதிகாரப் பிரயோகங்களுக்கு ஈரான் ஒருபோதும் வளைந்து கொடுக்காது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் Ebrahim Rezaei திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.




