லண்டனின் தேம்ஸ் நதியில் இருந்து சிறுவன் ஒருவனின் உடல் மீட்பு
லண்டனின் தேம்ஸ் நதியில் இறங்கிய 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாலை 06.50 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இரவு 10.50 மணிக்கு சிறுவனின் உடல் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் மரணம் எதிர்பாராதது, ஆனால் சந்தேகத்திற்குரியது அல்ல என பெருநகர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து திறந்தவெளி நீரில் உள்ள கடுமையான ஆபத்துகளை நினைவில் கொள்ளுமாறு துப்பறியும் கண்காணிப்பாளர் ஆலிவர் ரிக்டர் கேட்டுக்கொண்டார்.
மேலும், மக்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே நீந்த வேண்டும் என்றும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுடன் நீர் பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.




