உலகம் செய்தி

ஈரான் பயணத்தை முடித்துக்கொண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதி சீனா பயணம்!

பாகிஸ்தான் பிரதமருடன் அந்நாட்டு ராணுவத் தளபதியான ஆசிம் முனிரும் சீனாவிற்கு சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றமான சூழலைத் தணிக்கும் சமாதான முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படுகிறது. இதில் குறிப்பாக பாகிஸ்தான் ராணுவ தளபதியும் முக்கிய பங்கை வகிக்கின்றார்.

கடந்த வாரம் ஈரானுக்குச் சென்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி, அமைதி முயற்சி குறித்து விரிவான பேச்சுகளில் ஈடுபட்டார்.

இந்நிலையிலேயே அவர் தற்போது சீனா சென்றுள்ளார்.

போர் நிறுத்த முயற்சிக்கும், நீடித்த அமைதிக்கும் சீனாவின் உதவியையும் பாகிஸ்தான் எதிர்பார்க்கின்றது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றப்போவதாகச் சீனத் தரப்பு அறிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி