உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியை மீளத் திறப்பது தொடர்பில் ஈரான் – ஓமான் இடையே பேச்சுவார்த்தை

  • July 26, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியையும், அப்பகுதியில் உள்ள இரு நாடுகளின் பிராந்திய நீர்வழிகளையும் மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விஷயங்கள் சாதகமான திசையில் சென்றுகொண்டிருந்தாலும், ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு அதிக காலம் எடுக்கும் எனவும் விடயத்தை நன்கறிந்த வட்டாரம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்காக ஓமான் அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை தெஹ்ரானுக்கு பயணம் செய்ததாகவும், ட்ரம்பின்  கூற்றுக்களுடன் இந்த இராஜதந்திர அணுகுமுறு ஒத்துப்போவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே ஓமான்-ஈரான் பேச்சுவார்த்தைகளை வொஷிங்டன் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் தேசிய நலனுக்காக ட்ரம்ப்பை விமர்சிக்கவும் தயார் – ஆண்டி பர்னம்

  • July 26, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் தேசிய நலனை பாதுகாக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை விமர்சிக்கவும் தயாராக இருப்பதாக பிரதமர் ஆண்டி பர்னம் தெரிவித்துள்ளார். பிரதமராக பதவியேற்றப்பின் பிபிசிக்கு அவர் அளித்த முதலாவது பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ட்ரம்புடன் தனக்கு நல்ல உறவு இருந்ததாகவும், அவர் ஒரு நல்ல மனிதர் என்றும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நெறியாளர்,   அமெரிக்க ஜனாதிபதியை நம்புவீர்களா என்று இரண்டு முறை கேட்டிருந்தார்.  பர்னம் அந்த கேள்விக்கு  பதிலளிக்காமல், “இது ஒரு […]

இலங்கை

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது தொடர்பில் நீதியமைச்சருக்கு பறந்த உத்தரவு

  • July 26, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தைத் தயாரிக்குமாறு தனக்கு அறிவுறுத்தல்கள் வந்துள்ளதாக நீதித்துறை அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார தெரிவித்துள்ளார். அதன்படி, அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தைத் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார். இது தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான ஒரு முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டால், அதுகுறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாக […]

இலங்கை

துறைமுகத்தில் உரிமைக் கோரப்படாமல் இருக்கும் வாகனங்களை ஏலம் விட தீர்மானம்

  • July 26, 2026
  • 0 Comments

இறக்குமதியாளர்கள் இன்னும் சுங்க அனுமதி செயல்முறையை முடிக்காததால், ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் சுமார் 1,025 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இவற்றில் சுமார் 625 வாகனங்கள் இலங்கைக்கு வந்ததில் இருந்து ஆறு மாதங்களுக்கும் மேலாக துறைமுகத்தில் உள்ளதாக சுங்கத்துறை செய்தித் தொடர்பாளர் சந்தனா புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இந்த வாகனங்கள் எதுவும் சுங்க விதிமீறல்களுக்கு உட்பட்டவை அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார். சுங்கச் சட்டத்தின் 129-வது பிரிவின் கீழ், சுங்க விதிமீறல்கள் எதுவும் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் இடம்பெற்ற தாக்குதல் – தாக்குதல்தாரிக்கு ISIS அமைப்புடன் தொடர்பு

  • July 26, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் பெர்லின் நகரில்  LGBTQ+ நிகழ்விற்காகக் கூடியிருந்த மக்கள் மீது வேன் ஒன்று புகுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த நிகழ்வு ஆரம்பமான சிலமணி நேரங்களிலேயே இடைநிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தாக்குதல்தாரி தொடர்பான மேலதிக விவரங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த நபர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பெர்லின் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஈரான் போரில் சட்டப்பூர்வ இலக்காக மாறும் பிரித்தானியா

  • July 26, 2026
  • 0 Comments

ஈரானுடனான எந்தவொரு போரிலும் அமெரிக்காவிற்கு பிரித்தானியாஆதரவளித்தால், அது ஒரு “உறுதியான மற்றும் சட்டபூர்வமான இலக்காக” மாறும் என்று அந்நாட்டின் அரசு ஊடகமான IRIB செய்தி வெளியிட்டுள்ளது, ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோதலில் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கும் பிரித்தானியா மற்றும் வளைகுடா நாடுகள் உட்பட  எந்தவொரு நாடும் சட்டபூர்வமான இலக்காகக் கருதப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சமீபத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பிரித்தானியாவின் […]

காஸ்பியன் கடலில் உள்ள தனது வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல்

  • July 26, 2026
  • 0 Comments

காஸ்பியன் கடலில் உள்ள தனது வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு மாலுமி உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் ஈரான் கூறியுள்ளது. உக்ரைன் போரின் தொடக்கம் முதலே, ரஷ்யாவால் பயன்படுத்தப்படும் ஈரான் தயாரிப்பு ட்ரோன்களை உக்ரைன் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஈரான் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு ட்ரோன்களை இடைமறித்து அழிக்கும் தன் நிபுணத்துவ உதவிகளையும் உக்ரைன் வழங்கி வந்தது. தங்கள் […]

தென்மேற்கு பிரான்சில் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி, போர்டோ (Bordeaux) நகரை அச்சுறுத்தி வரும் நிலையில், அதைக்கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

தீவிரமடையும் காட்டுத்தீ: 3 லட்சம் பேர் வெளியேற்றம்; ஸ்பெயினில் அவசர நிலை பிரகடனம்

  • July 26, 2026
  • 0 Comments

தென்மேற்கு பிரான்சில் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி, போர்டோ (Bordeaux) நகரை அச்சுறுத்தி வரும் நிலையில், அதைக்கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். எனினும், “தீ இன்னும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பலத்த காற்று மற்றும் கடும் வெப்பநிலை காரணமாக தீயணைப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடந்த சில நாட்களாக எரிந்து வரும் காட்டுத்தீக்கு பயந்து 3,00,000-க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு […]

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சந்தித்த தொடர் தோல்விகளுக்குப் பிறகு, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வேக்கு எதிரான T20 தொடரை ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையிலேயே கைப்பற்றியுள்ளது. செய்தி விளையாட்டு

இரு தொடர்களை இழந்த பின் மீண்டெழுந்தது இந்திய அணி

  • July 26, 2026
  • 0 Comments

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சந்தித்த தொடர் தோல்விகளுக்குப் பிறகு, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வேக்கு எதிரான T20 தொடரை ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையிலேயே கைப்பற்றியுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில், எந்தவொரு தருணத்திலும் இந்தியாவின் வெற்றியைத் தவிர வேறு எந்த முடிவும் சாத்தியம் இல்லை என்ற அளவிலேயே ஆட்டம் அமைந்தது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ரசா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்தியாவின் தொடக்கம் சற்று தடுமாற்றமாக இருந்தாலும், திலக் […]

தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகளினதும் தலைவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அரசியல் இலங்கை செய்தி

ஜனாதிபதியை மூன்றாம் திகதி சந்திக்கிறது தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணி

  • July 26, 2026
  • 0 Comments

தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகளினதும் தலைவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் மூன்று பேர் என்ற அடிப்படையில் 18 தலைவர்கள் வரையில் இந்தச் சந்திப்பில் பங்குபற்றுவர் எனத் தெரியவருகின்றது. இந்த ஆறு கட்சிகளின் பொது மேடையின் சார்பில் அவற்றின் இணைப்பாளர் இரா.சாணக்கியன் எம்.பி. ஜனாதிபதியின் செயலாளருக்கு மேற்படி சந்திப்புக்கான கோரிக்கைக் […]