அரசியல் இலங்கை செய்தி

ஜனாதிபதியை மூன்றாம் திகதி சந்திக்கிறது தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணி

தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகளினதும் தலைவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகளினதும் தலைவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் மூன்று பேர் என்ற அடிப்படையில் 18 தலைவர்கள் வரையில் இந்தச் சந்திப்பில் பங்குபற்றுவர் எனத் தெரியவருகின்றது.

இந்த ஆறு கட்சிகளின் பொது மேடையின் சார்பில் அவற்றின் இணைப்பாளர் இரா.சாணக்கியன் எம்.பி. ஜனாதிபதியின் செயலாளருக்கு மேற்படி சந்திப்புக்கான கோரிக்கைக் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார் என்றும், அதற்கான பதிலை ஜனாதிபதியின் செயலாளர் நேற்று உடனடியாகவே இணைப்பாளருக்கு வழங்கினார் என்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பதிலிலேயே மேற்படி ஓகஸ்ட் மூன்றாம் திகதி காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறியவந்தது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை