பிரித்தானியாவின் தேசிய நலனுக்காக ட்ரம்ப்பை விமர்ச்சிக்கவும் தயார் – ஆண்டி பர்னம்
பிரித்தானியாவின் தேசிய நலனை பாதுகாக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை விமர்ச்சிக்கவும் தயாராக இருப்பதாக பிரதமர் ஆண்டி பர்னம் தெரிவித்துள்ளார்.
பிரதமராக பதவியேற்றப்பின் பிபிசிக்கு அவர் அளித்த முதலாவது பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், ட்ரம்புடன் தனக்கு நல்ல உறவு இருந்ததாகவும், அவர் ஒரு நல்ல மனிதர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நெறியாளர், அமெரிக்க அதிபரை நம்புவீர்களா என்று இரண்டு முறை கேட்டிருந்தார். பர்னம் அந்த கேள்விக்கு பதிலளிக்காமல், “இது ஒரு மாறிவரும் உலகம், இல்லையா? விஷயங்கள் எப்படி நடக்கின்றனவோ அப்படியே நாம் கணித்துத்தான் ஆக வேண்டும்” என்று பதிலளித்தார்.
மேலும் கருத்து வெளியட்ட அவர், “ட்ரம்ப்பின் கருத்திலிருந்து மாறுபட்ட ஒரு கருத்தை நான் ஏற்கமாட்டேன் என்றோ, பிரிட்டனுக்குச் சரியான ஒரு மாற்று யோசனையை நான் முன்வைக்க வேண்டியிருக்கும் என்றோ என்னால் எந்தச் சூழலிலும் கூற முடியாது.”
இந்தப் பணியை நீங்கள் சரியாகச் செய்ய வேண்டுமானால், இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும்.” ஈரானுடன் ஜனாதிபதி மோதலைத் தொடங்குவது குறித்து தனக்கு “கவலை” இருந்ததாகவும், “சரியானது என்று நான் நினைப்பதைச் சொல்வதில் நான் தயங்க மாட்டேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




