இலங்கை

பெல்லன்வில பகுதியில் துப்பாக்கிச்சூடு – நபர் ஒருவர் உயிரிழப்பு

  • July 25, 2026
  • 0 Comments

பெல்லன்வில பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் படுகாயம் அடைந்த நிலையில், களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆழமான காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இலங்கையில் நாளுக்கு நாள் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 14 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

இத்தாலியில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு : வீதியில் தஞ்சமடைந்த மக்கள்

  • July 25, 2026
  • 0 Comments

இத்தாலியின் ஐசெர்னியா (Isernia) மாகாணத்தில் உள்ள பிஸ்ஸோன் (Pizzone) என்ற இடத்தில் இன்று நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 4.1 ரிக்டர் அளவில் பதிவானதாக அந்நாட்டின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் நிறுவனம் (ஐஎன்ஜிவி) தெரிவித்துள்ளது. செர்னியா (மோலிஸ்) மாகாணத்தில் உள்ள பிசோனில்  (Pizzone)  சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த  இந்த நிலநடுக்கமானது மாகாணம் முழுவதும் உணரப்பட்டதாகவும், மக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களில் […]

பொழுதுபோக்கு

“ராஜா வந்தரே!! ராணி பின்னாலே” – சூர்யா பாடியுள்ள தி வெடிங் சாங்’ வெளியீடு

  • July 25, 2026
  • 0 Comments

வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘தி வெடிங் சாங்’ லிரிக் வீடியோ இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை, நடிகர் சூர்யாவே தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார் என்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.    

உலகம்

யேமனில் உள்ள ஹூதி இலக்குகள் மீது சவூதி அரேபியா வான்வழித் தாக்குதல்

  • July 25, 2026
  • 0 Comments

யேமனில் உள்ள ஹூதி இலக்குகள் மீது சவூதி அரேபியா தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரான் ஆதரவு ஹூதி இயக்கம் சவூதி நகரமான ஜிசான் மீதான ஏவுகணைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. யேமன் ஏவுகணைத் தாக்குதல்” காரணமாக சவூதி நகரமான ஜிசானில் தீ விபத்து ஏற்பட்டதாக ஹூதி அமைப்பினரின் ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கடந்த இரண்டு வாரங்களில் முதன்முறையாக, பரந்த பிராந்தியத்தில் அமெரிக்கா அல்லது ஈரான் நடத்திய இரவு நேர வான்வழித் தாக்குதல்கள் குறித்த […]

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தீயணைப்புக் குழுவிலிருந்து 11 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவித்துள்ளார். செய்தி

காட்டுத் தீயை கட்டுப்படுத்த கடும் போராட்டம்: பிரான்ஸ், ஸ்பெயினுக்கு விமானங்கள் அனுப்பி வைப்பு

  • July 25, 2026
  • 0 Comments

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தீயணைப்புக் குழுவிலிருந்து 11 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘rescEU’ குழுவிலிருந்து ஐந்து விமானங்கள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் பிரான்ஸிலும், நான்கு விமானங்கள் சனிக்கிழமையன்று ஸ்பெயினிலும் களமிறக்கப்பட்டுள்ளதாக விளக்கியுள்ளார். காட்டுத் தீ காரணமாக […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெறுமா? – ஆண்டி பர்னமின் முடிவு

  • July 25, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்னம்  திடீர் பொதுத் தேர்தல் நடத்துவதை நிராகரித்துள்ளார். தொழிலாளர் கட்சியின் 2024 தேர்தல் அறிக்கையைச் செயல்படுத்தும் “அத்தியாவசியப் பணிகளுக்கு” அது தடையாக இருக்கும் என்று கூறி  அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மென்செஸ்டரில் நேற்றைய தினம்  புதிய தலைமையகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  பிரித்தானியாவை மீண்டும் நம்பிக்கை கொள்ளச் செய்யவும்” மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் “நல்ல வளர்ச்சியை” […]

ஐரோப்பா

லண்டன் முழுவதும் மின்சார பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை நோட்டம் விடும் பொலிஸார்

  • July 25, 2026
  • 0 Comments

லண்டன் முழுவதும் சட்டவிரோத மின்சார பைக்குகள் மற்றும்  ஸ்கூட்டர்கள் மீதான கண்காணிப்பு  நடவடிக்கைகளை மெட்ரோபாலிட்டன் (Metropolitan) பொலிஸார் தீவிரப்படுத்தி வருகின்றனர். விதிமுறைகளுக்கு உட்படாத வாகனங்களைக் கண்டறிய, புதிய ‘ரோலிங் ரோடு’ சோதனைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. ‘ஆபரேஷன் லெக்ஸாண்டின் (Operation Lexand)  ஒரு பகுதியான இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையானது குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல், மற்றும்  கைபேசித் திருட்டில், அவற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதையும், பொதுப் பாதுகாப்பு குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதேநேரம் இந்த […]

தென் கொரிய கால்பந்து அணியின் மத்தியகள வீரரான (Midfielder) லீ காங்-இன், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (PSG) அணியிலிருந்து ஸ்பெயினின் அட்லெடிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணியில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார். செய்தி

35 மில்லியன் யூரோ ஒப்பந்தம்: அட்லெடிகோ மாட்ரிட்டில் இணையும் தென் கொரிய நட்சத்திரம்

  • July 25, 2026
  • 0 Comments

தென் கொரிய கால்பந்து அணியின் மத்தியகள வீரரான (Midfielder) லீ காங்-இன், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (PSG) அணியிலிருந்து ஸ்பெயினின் அட்லெடிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணியில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார். லீ காங்-இன் ஜூன் , 2031 வரை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று அட்லெடிகோ அணி சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இதற்கான இடமாற்றக் கட்டணம் (Transfer fee) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இது 35 முதல் 40 மில்லியன் யூரோக்களுக்கு இடைப்பட்டதாக ($39.8m – $45.5m) இருக்கும் எனக் […]

இலங்கை

இலங்கையில் உச்சபட்ச வெப்பநிலை திருகோணமலையில் பதிவு

  • July 25, 2026
  • 0 Comments

நாட்டில் இன்று உச்சபட்சமாக 39.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை திருகோணமலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை பொலன்னறுவை மாவட்டத்தில் 38.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. அதேபோல் வவுனியாவில்  – 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும்,  மொனராகலையில் 37.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், முல்லைத்தீவில்   37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.  

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்கள் "எதிரி முழுமையாகத் தோற்கடிக்கப்படும் வரை" தொடரும் என்று ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர் கவுன்சிலின் செயலாளர் முகமது பாகர் ஜோல்கதர் (Mohammad Bagher Zolghadr) எச்சரித்துள்ளார். உலகம் செய்தி

கொல்லப்பட்ட குழந்தைகளுக்காக பழிவாங்குவோம்: ஈரானிய பாதுகாப்பு அதிகாரி சபதம்

  • July 25, 2026
  • 0 Comments

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்கள் “எதிரி முழுமையாகத் தோற்கடிக்கப்படும் வரை” தொடரும் என்று ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர் கவுன்சிலின் செயலாளர் முகமது பாகர் ஜோல்கதர் (Mohammad Bagher Zolghadr) எச்சரித்துள்ளார். மேலும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் மற்றும் பாடசாலைக் குழந்தைகள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கப் போவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வச் செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் தெற்கு நகரமான மீனாப்பில் உள்ள சிறுமிகள் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலே […]