உலகம்

நைஜீரியாவில் கிராமமொன்றை சுற்றிவளைத்த ஆயுததாரிகள் – 30 பேர் படுகொலை

  • July 27, 2026
  • 0 Comments

நைஜீரியாவின் கடூனா மாநிலத்தில் இன்று அதிகாலை ஆயுததாரிகள் கிராமமொன்றை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில், குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிராமத்திற்குள் புகுந்த ஆயுததாரிகள் அங்கிருந்த மக்களை கண்மூடித் தனமாக சுட்டும், தாக்கியும் கொலை செய்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 08 குழந்தைகளும் அடங்குவதாக கிராமத் தலைவரின் செயலாளர் டோகன் ராணா (Dogon Rana) கூறினார். நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் வட-மத்தியப் பகுதிகளில் ஆயுதக் கும்பல்கள் மற்றும் பிற குற்றக் குழுக்களின் வன்முறை ஒரு பெரிய பாதுகாப்புச் சவாலாக மாறியுள்ளது. […]

உலகம்

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க விரும்பவில்லை – ஈரான் அறிவிப்பு

  • July 27, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தி இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க விரும்பவில்லை என்றும் ஈரான் இன்று அறிவித்துள்ளது. இரண்டு வாரங்களாகத் தொடர்ந்த குண்டுவீச்சுத் தாக்குதல் திடீரென இடைநிறுத்தப்பட்ட நிலையில், தெஹ்ரானும் தாக்குதல்களை நிறுத்தியது. இதனையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படலாம் என ஊகங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த  ஈரான் மேற்படி அறிவித்துள்ளது. அமெரிக்காவின் குண்டுவீச்சு நடவடிக்கை முடிவுக்கு வந்ததால், தடைபட்டிருந்த உலகளாவிய விநியோகம் மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையில் எண்ணெய் விலைகள் சரிந்தன. டந்த […]

ஐரோப்பா செய்தி

ஜேர்மனியில் மருத்துவ விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – விதிகளை கட்டாயமாக்க பரிசீலனை

  • July 27, 2026
  • 0 Comments

மருத்துவ விடுப்புச் சான்றிதழ் (sick leave) விதிகளைக் கடுமையாக்கும் திட்டங்களை ஜேர்மனி அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள தொழிலாளர்கள் 2024-ஆம் ஆண்டில் சராசரியாக சுமார் 22 நாட்கள் மருத்துவ விடுப்பாக  எடுத்துள்ளனர். இது சர்வதேச அளவில் மிக உயர்ந்த அளவுகளில் ஒன்றாகும். மின்னணு மருத்துவ விடுப்புச் சான்றிதழ் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 2022-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் இந்நிலை கவலைக்குரிய ஒன்றாக […]

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை "நேர்மை வாரம்" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சத்தியப் பிரமாண நிகழ்வு

  • July 27, 2026
  • 0 Comments

“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை “நேர்மை வாரம்” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (27) திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்கேற்புடன் நேர்மை சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், பொதுமக்களுக்கு […]

இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்கம், தேயிலை, இறப்பர் மற்றும் இரத்தினக்கல் போன்ற நாட்டின் வளங்களை மேம்படுத்த முடியாமல் நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

சட்டத்தரணிகள் சங்க தலைவருக்கு ‘அரசியல் லஞ்சமா’? – சஜித் மறுப்பு

  • July 27, 2026
  • 0 Comments

இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்கம், தேயிலை, இறப்பர் மற்றும் இரத்தினக்கல் போன்ற நாட்டின் வளங்களை மேம்படுத்த முடியாமல் நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது சஜித் பிரேமதாச கூறியவை வருமாறு , நீதிமன்றங்களின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவும், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவும் […]

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் வெடித்த நிலையில், தேர்வு முறைகேடுகளைத் தடுக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 24-ஆம் திகதி புதிய சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்தது. இலங்கை செய்தி

வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டமூலம் அறிமுகம்

  • July 27, 2026
  • 0 Comments

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் வெடித்த நிலையில், தேர்வு முறைகேடுகளைத் தடுக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 24-ஆம் திகதி புதிய சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதனடிப்படையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 6-ஆம் நாளான இன்று (ஜூலை 27), பொதுத் தேர்வு (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த சட்டமூலம் 2026-ஐ மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். : அவை நடவடிக்கைகள் தொடங்கியது முதல், நீட் […]

இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால், இந்தியாவின் பதிலடி கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்தியா செய்தி

பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி: இந்தியா எச்சரிக்கை

  • July 27, 2026
  • 0 Comments

இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால், இந்தியாவின் பதிலடி கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 1999-ஆம் ஆண்டு காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்ததன் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் திகதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. லடாக்கிலுள்ள கார்கில் போர் நினைவிடத்தில் நடைபெற்ற 27-ஆவது வெற்றி தின விழாவில், போரில் வீரமரணமடைந்த 527 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாதுகாப்புத்துறை அமைச்சர் […]

பாதாள குழு குறித்து நாமல் சர்ச்சைக் கருத்து அரசியல் இலங்கை செய்தி

பாதாள குழு குறித்து நாமல் சர்ச்சைக் கருத்து

  • July 27, 2026
  • 0 Comments

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு: “அரசாங்கத்தால் போஷிக்கப்படும் குற்றவாளிக் கும்பலொன்று உள்ளது. அவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இது தொடர்பில் அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும். பாதாளக் குழுக்களை ஒடுக்குவதற்குப் பதிலாக, எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் பணியையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. பாதுகாப்பு பிரதிமைச்சரின் கூற்றுகள் இதனையே பிரதிபலிக்கின்றன. தற்போதைய பொலிஸ் மா அதிபர், பொலிஸ் துறையை […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி; 4 பேர் காயம்

  • July 27, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் சியாட்டில் (Seattle) நகரின் மையப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உணவுத் திருவிழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பிஞ்சு குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்ததாகக் கூறியுள்ள காவல்துறையினர், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மற்றொரு சந்தேக நபருக்கும் தொடர்பிருப்பதாகக் காவல்துறையினர் நம்புவதாகவும், அந்த நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் சியாட்டில் காவல் துறையின் உதவித் தலைவர் டைரோன் டேவிஸ் (Tyrone Davis) ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற […]

President Ahmed al-Sharaa: Syria seeking security deal with Israel உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இஸ்ரேலுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு தயாராகிறிது சிரியா

  • July 27, 2026
  • 0 Comments

சிரியா, பல நாடுகளின் பங்களிப்புடன் இஸ்ரேலுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்குத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக சிரிய அதிபர் அகமத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தெரிவித்துள்ளார். அல் ஜசீரா தொலைக்காட்சியின் ‘அல் முகாபலா’ (Al Muqabala) நிகழ்ச்சிக்கான சிறப்பு நேர்காணலில் கருத்து வெளியிட்ட அல்-ஷாரா, இஸ்ரேலுடனான இந்த ஒப்பந்தம் ஒரு விரிவான அமைதிக்கான நுழைவுவாயிலாக அமையும் என்று நம்புவதாகத் தெரிவித்தார். மேலும், 1973 முதல் இஸ்ரேலால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோலான் குன்றுகள் (Golan Heights) மீதான சிரியாவின் […]