ஐரோப்பா

ஜெர்மனியில் பாரேட் நிகழ்வில் தாக்குதல் நடத்திய நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

  • July 27, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் பாரேட் நிகழ்வின்போது மக்கள் மீது வேன் ஒன்றை மோதி தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதல்தாரியான 21 வயதுடைய இளைஞர்   இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பை பேணியதாக தெரியவந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்படி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் சிலர் தாக்குதல் நடத்தியவர் பயன்படுத்திய கூர்மையான ஆயுதத்தால் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல்தாரியை கைது செய்ய முயன்றபோது அவர் கூர்மையான ஆயுதத்துடன் பொலிஸாரை […]

ஐரோப்பா

“ரஷ்யாவுக்கு சந்தேகம் வேண்டாம் : பிரித்தானியா உக்ரைனுக்கு தோளோடு தோள் நிற்கிறது

  • July 27, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆண்டி பர்னம் இன்றைய தினம் (27.07) உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்கவுள்ளார். இடைக்கால பிரதமராக பதவியேற்றப்பின் தனது முதல் சர்வதேச விருந்தினராக அவர் ஜெலென்ஸ்கியை வரவேற்கவுள்ளார். இது உக்ரைனுக்கான லண்டனின் அசைக்க முடியாத ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. இரு தலைவர்களும் ஒரு கடற்படைத் தளத்தில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு, பிரிட்டன் தலைமையிலான பயிற்சித் திட்டங்கள் உக்ரைனின் ஆயுதப் படைகளை வலுப்படுத்தவும், போர்க்களத்தில் முடிவுகளை வழங்கவும் […]

உலகம்

மொரோக்கோ நெடுஞ்சாலைக்கு ட்ரம்பின் பெயர் -மன்னருக்கு நன்றி

  • July 26, 2026
  • 0 Comments

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் முக்கிய நெடுஞ்சாலையொன்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மன்னர் ஆறாம் முகமதுவுக்கு ட்ரம்ப் நன்றி கூறியுள்ளார். இது தொடர்பில் தனது ட்ரூத் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், மிகவும் மதிக்கப்படும் மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது அவர்களுக்கு நன்றி — இது ஒரு மாபெரும் கௌரவம்! என்றாவது ஒரு நாள், இந்த மாபெரும் நெடுஞ்சாலையின் முழு நீளத்திற்கும் பயணம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன், விரைவில் அது […]

உலகம்

ஆர்ஜென்டினாவின் தூதுவரை திரும்ப அழைத்தது பிரேசில்

  • July 26, 2026
  • 0 Comments

ஆர்ஜென்டினாவின் தூதுவரை பிரேசில் திரும்ப அழைத்துள்ளது. ஆர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜாவியர் மிலே (Javier ​Milei), பிரேசிலின் தலைவர்களையும் நீதித்துறையையும் விமர்சித்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜாவியர் மிலே பிரேசில் ஜனாதிபதி பொல்சனரோவை, “குற்றவாளி என்று அழைத்தார், பிரேசில் அரசாங்கத்தை “திருடும் சோசலிஸ்டுகள்” என்று முத்திரை குத்தினார், மேலும் “லூலாவைத் தடுக்க” கன்சர்வேடிவ் வேட்பாளரால் மட்டுமே முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.  

ஐரோப்பா

லண்டனின் கேட்விக் விமான நிலையத்தில் நீர் விநியோக சிக்கல்

  • July 26, 2026
  • 0 Comments

லண்டனின் கேட்விக் விமான நிலையத்தில் இன்றைய தினம்  நீர் விநியோக சிக்கல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான இதில் கழிப்பறைகள் பழுதடைந்துள்ளதாகவும், உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த பிரச்சினையால் விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால் தங்களால் கழிப்பறைகளைப் பயன்படுத்தவோ, சூடான பானங்களைப் பெறவோ, கைகளைக் கழுவவோ அல்லது தண்ணீர் பாட்டில்களை நிரப்பவோ முடியவில்லை என்று பயணிகள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். “ஹார்லி பகுதியில் ஏற்பட்ட ஒரு நீர்ப் பிரச்சனை இன்று […]

ஐரோப்பா

மூன்றாவது முறையாக ட்ரோனை சுட்டு வீழ்த்திய ருமேனியா

  • July 26, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ருமேனியா இன்று அறிவித்துள்ளது. இதற்கமைய ருமேனியாவானது மூன்றாவது ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி நிகுசர் டான் (Nicusor Dan), “இந்நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சகித்துக்கொள்ள முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார். ருமேனியா, உக்ரைனுடன் 650 கி.மீ (400 மைல்) நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் உக்ரைன் போரின் போது, ​​ரஷ்ய ஆளில்லா விமானங்கள் அதன் வான்வெளியை […]

அமெரிக்காவின் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், செங்கடல் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தினாலும் பதற்றம் தணியவில்லை

  • July 26, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், செங்கடல் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேவேளை, காஸ்பியன் கடலில் உள்ள தனது வணிகக் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதனால், வார இறுதியில் ஈரான் போர் மேலும் விரிவடைந்துள்ளது. ஈரானுக்கு எதிரான தனது கடற்படை முற்றுகை முழுமையாக அமலில் உள்ளதாக சனிக்கிழமை தெரிவித்த அமெரிக்க […]

உலகம்

துனியாவில் ஜனாதிபதிக்கு எதிராக அணித்திரண்ட மக்கள் – பதவி விலக வலியுறுத்தல்

  • July 26, 2026
  • 0 Comments

துனியாவில் ஜனாதிபதியான கைஸ் சயீத் (Kais Saied) உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மோசமடைந்து வரும் வாழ்க்கை நிலைமைகள், ஜனநாயகத்தின் வீழ்ச்சி மற்றும் அரசாங்கத்தின் திறமையற்ற பொருளாதார மேலாண்மை ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இடம்பெற்ற மிகப்பெரிய பொதுப் போராட்டமாகக் கருதப்படுகிறது. ஜனாதிபதி அவசரகால அதிகாரங்களைக் கைப்பற்றியதிலிருந்து அரசியல் கைதிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாகவும், அவர்களை விடுதலை செய்யுமாறும் […]

இலங்கை

அரசாங்கம் நிர்ணயித்ததை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை – 500000 ரூபாய் அபராதம்

  • July 26, 2026
  • 0 Comments

இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த நிறுவனம் ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காலி அக்மீமன பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசி ஒரு கிலோகிராமுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 255 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலையை விடக் அதிகமாக 270 ரூபாய்க்கு விற்பனை செய்தமை தொடர்பாக, சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் காலி மாவட்ட […]

இலங்கை

மறைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சீ. டி. விக்ரமரத்னவிற்கு அஞ்சலி

  • July 26, 2026
  • 0 Comments

மறைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சீ. டி. விக்ரமரத்ன அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என திருகோணமலை ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) விஷயத்தை பூசை மற்றும் அன்னதான நிகழ்வும் இடம் பெற்றது. லக்ஷ்மி நாராயணன் ஆலய நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் அவரை நினைவு கூர்ந்து மலர் மாலை போட்டு விளக்கேற்றியதும் குறிப்பிடத்தக்கது.