உலகம்

சிக்கலான அரசியல் கொள்கைகள் : குடியுரிமையை துறந்த அமெரிக்கர்கள்!

  • June 12, 2026
  • 0 Comments

2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 5,000 அமெரிக்கர்கள் தங்களின் குடியுரிமையை துறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். பெரும்பாலும் நிதிசார்ந்த விடயங்களுக்காகவே மக்கள் குடியுரிமையை துறக்கின்றனர். அமெரிக்காவில்  வசிப்பிடத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், குடியுரிமையின் அடிப்படையில் தனித்துவமாக வரி விதிக்கப்படுகிறது. இதனால், வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஆண்டுதோறும் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இதுவும் அமெரிக்கர்கள் குடியுரிமையை துறக்க வழிவகுத்துள்ளது. அதேநேரம் சிலர் நிதி சார்ந்த காரணங்களைத் தாண்டி,  தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களையும் […]

ஐரோப்பா செய்தி

பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் பிரிட்டன் பிரதமர்!

  • June 12, 2026
  • 0 Comments

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து வளங்களும் ராணுவத்திற்கு வழங்கப்படும் என்று பிரித்தானியப் பிரதமர் Keir Starmer உறுதியளித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் John Healey விலகியுள்ள சூழ்நிலையிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கத்தின் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் குறித்தும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை, ஆயுதப் படைகளின் அமைச்சர் Al Carns நேற்று நள்ளிரவில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள போதிலும், அது குறித்து பிரதமர் இதுவரை பகிரங்கமாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், நாட்டின் […]

அரசியல் இலங்கை செய்தி

அன்று போராடியவர்கள் இன்று AC அறையில்: நாமல் கொதிப்பு!

  • June 12, 2026
  • 0 Comments

“வடக்கில் ஒரு கதையும், கிழக்கில் வேறொரு கதையும் இனிவரும் காலங்களில் பேசமுடியாது.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார். திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று (12), நடைபெற்ற திருகோணமலை தொகுதி ஆதரவாளர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச் இவ்வாறு கூறினார். “தொழிற்சாலைகள் மூடப்படும்போது அதற்கு எதிராக ஆளுங்கட்சியினர் குரல் எழுப்புவதில்லை. ஆனால் எதிரணியில் இருக்கும்போது போராடினார்கள். கடந்த காலங்களில் ஏழை மக்களுக்காக வீதிகளில் இறங்கி போராடியவர்கள் […]

உலகம்

03 வருட கோமா!! 41 ஆவது வயதில் பற்றிய மரணம்! விடைப்பெற்றார் தாய்லாந்து இளவரசி!!

  • June 12, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் மன்னர் மகா வஜிரலோங்க்கோர்னின் மூத்த மகளான இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் (Bajrakitiyabha Mahidol) தனது 41 ஆவது வயதில் காலமானார். இளவரசி பா என்று அறியப்பட்ட இவர் கடந்த 03 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் பயிற்சி பெற்ற வழக்கறிஞர் ஆவார். குறிப்பாக, சிறையில் உள்ள தாய்லாந்துப் பெண்களுக்கு  தனது ‘இன்ஸ்பயர்’ திட்டத்தின் மூலம் பல உதவிகளை செய்துள்ளார். 2022-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும்போது மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து அவர் […]

உலகம் செய்தி

மீண்டும் பரபரப்பு! ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் பதிலடி!!

  • June 12, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், விரைவில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும் என்று வியாழக்கிழமையன்று டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் பேச்சுவார்த்தையாளர்கள் ஈரானுடன் ஒரு சிறந்த சமரசத்தை எட்டியுள்ளதால், அந்தத் தாக்குதல்களை ரத்து செய்வதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட […]

உலகம் செய்தி

தென்கொரியா முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டுகள் சிறை!

  • June 12, 2026
  • 0 Comments

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி Yoon Suk Yeol இற்கு 30 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி Yoon Suk Yeol கடந்த 2024-ஆம் ஆண்டு ராணுவச் சட்டத்தைப் பிறப்பிப்பதற்காக, வேண்டுமென்றே வட கொரியா மீது ட்ரோன்களை ஏவிச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் எதிரிக்கு உதவியது போன்ற குற்றங்களுக்காக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. முன்னதாக, உள்நாட்டுப் புரட்சிக்குத் தலைமை […]

ஐரோப்பா

பிரித்தானிய மக்களின் மனநிலை மாற்றம் : மீண்டும் சூடுபிடித்த விவாதம்!

  • June 12, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் அரைவாசி மக்கள் பிரெக்ஸிட் பொது வாக்கெடுப்பை ஆதரிப்பார்கள் என கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பிரெக்ஸிட் மீதான பொதுமக்களின் மனநிலை கணிசமாக மோசமடைந்துள்ளது. 2021-ல் 27 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை, தற்போது 48 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கணிக்கப்பட்டதை விட மோசமாகச் செல்கிறது என்று நிபுணர்கள் நம்புகின்றார்கள். இது மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதற்கான விருப்பத்தை காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் […]

அரசியல் இலங்கை செய்தி

தெற்கு அரசியலில் பரபரப்பு: பிக்குகளை நாடும் எதிரணி!

  • June 12, 2026
  • 0 Comments

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களிடம் முறையிடுவதற்கு கூட்டு எதிரணி தீர்மானித்துள்ளது. கூட்டு எதிரணியின் விசேட கூட்டமொன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதியையும் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு கூட்டு எதிரணி திட்டமிட்டுள்ளது. “ சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கும் நிலைப்பாட்டிலேயே இந்த அரசாங்கம் இருக்கின்றது. இதனால் எமது மக்களுக்கு ஏற்படும் நெருக்கடி தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்தப்படும்.” என்று கூட்டு எதிரணி […]

ஆஸ்திரேலியா செய்தி விளையாட்டு

25 வயதில் முடிந்த வாழ்க்கை!

  • June 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, மெல்போர்னைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை Jemma Stapleton , தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடிய சில நாட்களில் தாய்லாந்தில் காலமானார். புகழ்பெற்ற Stawell Gift ஓட்டப்பந்தயத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இவர், தனது குடும்பத்தினருடன் Koh Samui தீவில் சுற்றுலா சென்றிருந்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்தது. அவரது மறைவுக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. எனினும், ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு அவரது குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. ஜெம்மாவின் சகோதரர் மற்றும் வாழ்க்கைத் […]

செய்தி விளையாட்டு

தென்கொரியாவின் கனவு வெற்றி நனவானது!

  • June 12, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தொடரில் தென் கொரியா மற்றும் செக் குடியரசு அணிகள் மோதிய விறுவிறுப்பான போட்டியில் தென்கொரியா அணி வெற்றிபெற்றுள்ளது. ஆட்டத்தின் பெரும்பகுதியை தென் கொரியா கட்டுப்படுத்தினாலும், செக் குடியரசு அணி முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. எனினும், ஹ்வாங் இன்-பியோமின் சிறப்பான ஆட்டத்தால் தென் கொரியா விரைவாகப் பதிலடி கொடுத்து சமநிலையை எட்டியது. இறுதியில் மாற்று வீரராக வந்த ஓ ஹியோன்-க்யு ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்து தனது […]