அரசியல் இலங்கை செய்தி

அன்று போராடியவர்கள் இன்று AC அறையில்: நாமல் கொதிப்பு!

“வடக்கில் ஒரு கதையும், கிழக்கில் வேறொரு கதையும் இனிவரும் காலங்களில் பேசமுடியாது.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.

திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று (12), நடைபெற்ற திருகோணமலை தொகுதி ஆதரவாளர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச் இவ்வாறு கூறினார்.

“தொழிற்சாலைகள் மூடப்படும்போது அதற்கு எதிராக ஆளுங்கட்சியினர் குரல் எழுப்புவதில்லை. ஆனால் எதிரணியில் இருக்கும்போது போராடினார்கள்.

கடந்த காலங்களில் ஏழை மக்களுக்காக வீதிகளில் இறங்கி போராடியவர்கள் இன்று மாயமாகியுள்ளனர்.

கொழும்பில் அவர்கள AC அறையில் இருக்கிறார்கள் . மக்கள் விடயத்தில் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை.” எனவும் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மொட்டு கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை