03 வருட கோமா!! 41 ஆவது வயதில் பற்றிய மரணம்! விடைப்பெற்றார் தாய்லாந்து இளவரசி!!
தாய்லாந்தின் மன்னர் மகா வஜிரலோங்க்கோர்னின் மூத்த மகளான இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் (Bajrakitiyabha Mahidol) தனது 41 ஆவது வயதில் காலமானார்.
இளவரசி பா என்று அறியப்பட்ட இவர் கடந்த 03 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவர் பயிற்சி பெற்ற வழக்கறிஞர் ஆவார். குறிப்பாக, சிறையில் உள்ள தாய்லாந்துப் பெண்களுக்கு தனது ‘இன்ஸ்பயர்’ திட்டத்தின் மூலம் பல உதவிகளை செய்துள்ளார்.
2022-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும்போது மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது அவருக்கு நிமோனியாவுடன் தொடர்புடைய மைக்கோபிளாஸ்மா தொற்று இருப்பது உறிதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கோமா நிலைக்கு சென்ற அவர், ஒவ்வொரு உறுப்புக்களாக செயலிழந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.




