உலகம்

சிக்கலான அரசியல் கொள்கைகள் : குடியுரிமையை துறந்த அமெரிக்கர்கள்!

2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 5,000 அமெரிக்கர்கள் தங்களின் குடியுரிமையை துறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

பெரும்பாலும் நிதிசார்ந்த விடயங்களுக்காகவே மக்கள் குடியுரிமையை துறக்கின்றனர்.

அமெரிக்காவில்  வசிப்பிடத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், குடியுரிமையின் அடிப்படையில் தனித்துவமாக வரி விதிக்கப்படுகிறது.

இதனால், வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஆண்டுதோறும் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இதுவும் அமெரிக்கர்கள் குடியுரிமையை துறக்க வழிவகுத்துள்ளது.

அதேநேரம் சிலர் நிதி சார்ந்த காரணங்களைத் தாண்டி,  தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களையும் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை குடியுரிமையைத் துறக்கும் செயல்முறை சிக்கலானது. இதற்கு அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுடன் பல நேர்காணல்களும், நேரில் உறுதிமொழி எடுப்பதும் தேவைப்படுகிறது.

மேலும், இது நாடற்றவராக மாறும் அபாயத்தையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்