பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் பிரிட்டன் பிரதமர்!
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து வளங்களும் ராணுவத்திற்கு வழங்கப்படும் என்று பிரித்தானியப் பிரதமர் Keir Starmer உறுதியளித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் John Healey விலகியுள்ள சூழ்நிலையிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் குறித்தும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஆயுதப் படைகளின் அமைச்சர் Al Carns நேற்று நள்ளிரவில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள போதிலும், அது குறித்து பிரதமர் இதுவரை பகிரங்கமாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
எனினும், நாட்டின் பாதுகாப்புத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பிற்காகச் செலவிடப்படும் நிதியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் இராணுவ வலிமையைப் பலப்படுத்த அமைச்சரவை திட்டமிட்டுள்ளது.




